Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”


தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்துக்கு மதுப்பழக்கம் இல்லை என்று அவரது கட்சி எம்.எல்.ஏ. வெங்கடேசன், திருக்கோவிலூரில் நடைபெற்ற உறுப்பினர் அட்டை வழங்கும் விழாவில் கூறினார்.

திருக்கோவிலூர் சட்டப்பேரவைத் தொகுதியில் தே.மு.தி.க.வினருக்கு அடையாள அட்டை வழங்கும் விழா,  திருக்கோவிலூரில் இன்று நடைபெற்றது. ஒன்றியச் செயலர் ஆர்.காமராஜ் தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலர் கே.உமாசங்கர் முன்னிலை வகித்தார்.

மாவட்டச் செயலரும், சட்டப்பேரவை உறுப்பினருமான எல்.வெங்கடேசன் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார்.
அப்போது அவர்,  ‘’மாவட்டத்தில் 144 தடை உத்தரவு நீடிப்பு என்பது எதிர்க்கட்சிகளின் குரல்வளையை நெரிக்கின்ற செயல். இதனை தேமுதிக வன்மையாக கண்டிக்கிறது.

பொதுமக்கள் மத்தியில் விஜயகாந்துக்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில், ஆளுங்கட்  சியைச் சேர்ந்தவர்களும், சில பத்திரிகைகளும் அவரைப்பற்றி உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிடுகின்றார்கள். 
மாவட்டச் செயலர் என்ற முறையில் நெருங்கிப் பழக வாய்ப்பு கிடைத்ததாலும், பலநாள் அவரோடு தங்குவதற்கான சூழல் அமைந்ததாலும், சத்தியமாக நான் அறிந்த வகையில் அவருக்கு மது பழக்கம் கிடையாது என்று தெரிவித்தார்.

0 Responses to சத்தியமாக விஜயகாந்துக்கு மதுப்பழக்கம் இல்லை என்கிறார் தேமுதிக எம்.எல்.ஏ.

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com