Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

எகிப்தில் நாளுக்கு நாள் முன்னால் அதிபர் மோர்ஸியின் ஆதரவாளர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல் அதிகரித்து வரும் நிலையில் இன்று புதன்கிழமை மட்டும் 15 ஆர்ப்பாட்டக்காரர்களும் 5 பாதுகாப்புப் படையினரும் கொல்லப் பட்டிருப்பதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

மேலும் மோர்ஸியின் ஆதரவாளர்களால் அமைக்கப் பட்ட இரு மிகப்பெரிய தற்காலிக முகாம்களையும் பல கூடாரங்களையும் புல்டோசர்கள் மூலம் எகிப்தின் அரச படைகள் வலுக்கட்டாயமாக அகற்றி நூற்றுக் கணக்கான ஆர்ப்பாட்டக் காரர்களை விரட்டியடித்துள்ளனர். அகற்றப் பட்ட முகாம்களில் கெய்ரோ பல்கலைக் கழகத்துக்கு அண்மையில் இருந்த நாஹ்டா முகாமும் அடங்கும்.

இந்நிலையில் எகிப்தின் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் ஆதரவாளர்கள் எகிப்து முழுவதும் பல போலிஸ் நிலையங்களைத் தாக்கியுள்ளனர். எகிப்து கலவரங்களில் இதுவரை 200 ஆர்ப்பாட்டக் காரர்கள் வரை கொல்லப் பட்டதுடன் 8000 பேர் வரை காயமடைந்துள்ளனர். பெரும்பான்மையான ஆர்ப்பாட்டக் காரர்கள் தற்போது றபா நகரை முற்றுகையிடச் சென்று கொண்டுள்ளனர். இதனால் எகிப்து அரசு றபா முகாமுக்கு இட்டுச் செல்லும் அனைத்துப் பாதைகளையும் அடைத்துள்ளதுடன் அங்கிருந்து கெய்ரோவுக்கான ரயில் சேவையையும் நிறுத்தியுள்ளது.

0 Responses to மோர்ஸி ஆதரவாளர்களுக்கும், எகிப்து பாதுகாப்புப் படையினருக்கும் இடையே கடும் மோதல்:20 பேர் பலி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com