மோதல் காலங்களில் வடக்கு- கிழக்கில்
காணாமற்போனவர்களை பற்றி விசாரிக்கும் ஆணைக்குழுவுக்கு மூன்று பேரடங்கிய
உறுப்பினர்கள் குழுவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று புதன்கிழமை
நியமித்துள்ளார்.
மெக்ஸ்வெல் பராக்கிரம பரணகம தலைமையிலான குழுவில், பிரியந்தி சுரஞ்சனா வைத்தியரத்ன, மனோ இராமநாதன் ஆகியோர் அடங்குகின்றனர்.
காணாமற்போனவர்கள் பற்றி விசாரிக்கும் ஆணைக்குழு ஆறு மாதங்களுக்கு ஜனாதிபதியிடம் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்தோடு, தேவையேற்படும் பட்சத்தில் புலனாய்வு செய்வதற்கும் ஆணைக்குழுவுக்கு ஜனாதிபதியினால் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
ஆட்கள் கடத்தப்பட்ட அல்லது காணாமற்போக செய்த சம்பவங்கள் கண்டறியப்படுமிடத்து அதற்கு பொறுப்பானவர்களை அடையாளம் காண்பது அவசியம் எனவும், அந்த நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆணைக்குழுவிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அத்தோடு, பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு என்பவற்றுக்காகவும் எதிர்காலத்தில் இத்தகைய சம்பவங்கள் இடம்பெறுவதைத் தடுப்பதற்கும் குறித்த விசாரணை அறிக்கை பயனுள்ளதாக அமையும் என்று நம்புவதாக ஜனாதிபதி ஆணைக்குழுவின் உறுப்பினர்களிடம் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Responses to காணாமற்போனவர்கள் பற்றி விசாரணை செய்யும் ஆணைக்குழுவுக்கு உறுப்பினர்கள் நியமனம்