நாடு முழுவதும் 21 நீதிமன்றங்களில் 23 ஆயிரத்து 792 பாலியல் குற்றச்சாட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன என்று நாடாளு மன்றத்தில் மத்திய சட்டத்துறை அமைச்சர் கபில் சிபல் தகவல் அளித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தின் போது, மத்திய சட்டத்துறை அமைச்சர் எழுத்து மூலம் ஒரு கேள்விக்கு பதில் அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது, கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் 30ம் திகதி நிலவரப்படி, நாடு முழுவதும் உயர் நீதிமன்றங்களில் 23 ஆயிரத்து 792 பாலியல் பலாத்கார வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இவற்றில் 2009 - 2012 ஆண்டு காலப்பகுதியில் 8 ஆயிரத்து 772 வழக்குகள் தீர்வு காணப்பட்டுள்ளன. எனினும் அதிகபட்சமாக அலகாபாத், உயர் நீதி மன்றத்தில் 8 ஆயிரத்து 215 வழக்குகள் நிலுவையில் உள்ளன. அங்கு கடந்த 3 ஆண்டுகளில் 39 வழக்குகள் தீர்வு காணப்பட்டுள்ளன. டெல்லி உயர் நீதிமன்றத்தில் 924 பாலியல் பலாத்கார வழக்குகள் நிலுவையில் இருந்தன. அவற்றில் கடந்த 3 ஆண்டுகளில் 1,135 வழக்குகள் தீர்வு காணப்பட்டுள்ளன.
கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் 243 வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த 3 ஆண்டுகளில் 4,522 வழக்குகள் தீர்வு காணப்பட்டுள்ளன. சிக்கிம் உயர் நீதிமன்றத்தில் கற்பழிப்பு வழக்குகளே நிலுவையில் இல்லை என்பது குறிப்பிடத் தக்கது. அங்கு கடந்த 3ஆண்டுகளில் 2 வழக்குகள் தீர்வு காணப்பட்டுள்ளன.
டெல்லி கற்பழிப்பு சம்வபத்தை தொடர்ந்து மாவட்ட நீதிமன்றங்கள் மற்றும் கீழ் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள பாலியல் பலாத்கார வழக்குகளை விரைந்து தீர்க்க விரைவு நீதிமன்றங்களை அமைக்குமாறும், அவற்றின் முன்னேற்றத்தை கவனிக்குமாரும் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளையும், மாநில முதலமைச்சர்களையும் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. அதன் படி ஏற்கனவே உள்ள நீதிமன்றங்களில் இருந்து பிரிந்து தனி நீதிமன்றங்களை மாநில அரசுகள் அமைத்துள்ளன என்றும் கபில் சிபல் கூறியுள்ளார்.



0 Responses to இந்தியாவின் 21 உயர் நீதிமன்றங்களில் 23, 792 பாலியல் பலாத்கார வழக்குகள் நிலுவையில் உள்ளன