தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்புக்குள் நுழைவதை தடுப்பதே, அவர்கள் கைது செய்யப்படுவதை தவிர்க்க உதவும் என்று இந்தியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் பிரசாத் காரியவசம் தெரிவித்துள்ளார்.
தமிழக மீனவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் இலங்கைக் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை விரைவாக விடுதலை செய்ய வேண்டும் என்பது தொடர்பில் தமிழக அரசு தொடர்ச்சியாக விடுத்த வேண்டுகோள்களை அடுத்து, இந்திய வெளிவிவகார அமைச்சினால் நேற்று புதன்கிழமை அழைக்கப்பட்டு பிரசாத் காரியவசம் அறிவுறுத்தப்பட்டார்.
தமிழக மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைவதனால் இலங்கையின் வடக்கு மாகாண மீனவர்கள் பாதிக்கப்படுவதாக குறித்த சந்திப்பின் போது சுட்டிக்காட்டிய பிரசாத் காரியவசம், இலங்கை கடற்பரப்புக்குள் தமிழக மீனவர்கள் நுழைவதை தடுப்பதே, அவர்களின் கைதுகளை தவிர்க்க உதவும். இல்லாத பட்சத்தில் இந்த பிரச்சினைகள் தொடரும் வாய்ப்புக்கள் உள்ளதாக எடுத்துக் கூறியுள்ளார்.




0 Responses to இலங்கை கடற்பரப்பிற்குள் தமிழக மீனவர்கள் நுழைவதை தடுக்க வேண்டும்: பிரசாத் காரியவசம்