Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மும்பை கப்பற்படை தளத்தில் வெடித்து சிதறிய நீர் மூழ்கி கப்பலில் உயிரிழந்த மாலுமிகள் 18 பேரில் 3 பேரின் உடல்களை, மீட்பு பணியினர் இன்று மீட்டுள்ளனர்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் டிசலில் இயங்கும் பழங்காலத்து நீர் மூழ்கி கப்பல், திடீரென்று வெடித்து சிதறியது.  18 மாலுமிகளின் நிலை பற்றி விவரங்கள் ஒன்றும்  தெரியவில்லை. மேலும் அவர்கள் உயிருடன் இருப்பது சாத்தியமில்லை எனும் கருத்து நிலவி வந்த வேளையில், இன்று மீட்பு குழுவினர் 3 மாலுமிகளின் உடலை மீட்டுள்ளனர்.

மீதம் உள்ள மாலுமிகளின் உடல்களைத் தேடும் பணிகள் தீவிரமடைந்து வருகின்றன. மீட்கப்பட்ட மாலுமிகளின் உடல்களை டி  என் ஏ பரிசோதனை செய்து அடையாளம் கண்டுபிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

டி என் ஏ பரிசோதனைக்குப் பின்னர் உடல் உரியவரிடம் ஒப்படைக்கப்படும் என்றும் தெரிய வருகிறது. இதற்கிடையில் தீ விபத்து நேர்ந்தமைக்கான விசாரணையும் ஒரு புறம் அதி  விரைவாக நடைபெற்று வருவதாகவும் தகவல் தெரிய வருகிறது.

0 Responses to மும்பை; வெடித்து சிதறிய நீர்மூழ்கி கப்பலில் இருந்து 3 மாலுமிகளின் உடல் இன்று மீட்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com