Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கர்நாடகாவில் தாய், மகள் இருவரையும் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த தூக்கு தணடனை கைதிகள் இருவரின் கருணை மனுவை, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நிராகரித்துள்ளார்.

குடியரசுத் தலைவராக பிரணாப் முகர்ஜி பதவி ஏற்றுக் கொண்ட கடந்த 11 மாதங்களில் 13 கருணை மனுக்களை நிராகரித்துள்ளார். கடந்த 2001ம் அண்டு கர்நாடகாவில் தாய், மகளை கற்பழித்து கொலை செய்த குற்றத்துக்காக, தூக்குதண்டனை பெற்ற இரு கைதிகளின் கருணை மனுக்களை இன்று நிராகரித்ததன் மூலம், தன்னிடம் இனி தூக்கு தண்டனைக் கைதிகளின் கருணை மனுக்கள்  நிலுவையில் இல்லை என்றும் கூறியுள்ளார் பிரணாப் முகர்ஜி.

கடந்த ஆண்டுகளில் இதுவரை பிரணாப் முகர்ஜி அளவுக்கு யாரும் தூக்கு தண்டனைக் கைதிகளின் கருணை மனுக்களை நிராகரிக்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

கடந்த 1992 முதல் 1997 வரை குடியரசுத் தலைவர் பதவியில் இருந்த சங்கர் தயாள்  சர்மா, பதவியில் இருந்த 5 ஆண்டுகளில் 14 தூக்கு தண்டனைக் கைதிகளின் கருணை மனுக்களை நிராகரித்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

0 Responses to கர்நாடக தூக்கு தண்டனை கைதிகள் இருவரின் கருணை மனுவை நிராகரித்தார் பிரணாப் முகர்ஜி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com