இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளுமாறு வணக்கத்துக்குரிய பாப்பரசர் பிரான்ஸிஸூக்கு, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.
இலங்கைக்கு விஜயம் செய்வது தொடர்பில் ஆர்வம் கொண்டிருப்பதாக சில நாட்களுக்கு முன்னர் பாப்பரசர் அறிவித்திருந்த நிலையிலேயே ஜனாதிபதியினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஆசிய நாடுகளுக்கான விஜயமொன்றை அடுத்த ஆண்டு மார்ச் மாதமளவில் மேற்கொள்வதற்கு பாப்பரசர் தீர்மானித்துள்ளார். இந்த விஜயத்தின் போது, இலங்கைக்கு வருமாறு ஜனாதிபதி உத்தியோகபூர்வ அழைப்பை விடுத்துள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு இன்று வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.
இலங்கையில் கடும்போக்கு பௌத்த அமைப்புக்கள் ஏனைய மத நிறுவனங்கள் மற்றும் ஸ்தலங்கள் மீது தொடர்ச்சியான அச்சுறுத்தல்களை விடுத்து வரும் நிலையில், பாப்பரசர் பிரான்ஸிஸை இலங்கை வருமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளது கவனிக்கத்தக்கது.
இதனிடையே, ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் தலைவர்களான பாப்பரசர்கள் இலங்கைக்கு ஏற்கனவே இரண்டு முறை விஜயம் செய்துள்ளனர். 1977ஆம் ஆண்டு பாப்பரசர் நான்காவது போலும், அதன் பின்னர் 1995ஆம் ஆண்டு பாப்பரசர் இரண்டாவது ஜோன் போலும் விஜயம் செய்துள்ளனர்.
பாப்பரசர் இரண்டாவது ஜோன் போல் அவர்கள் இலங்கைக்கு விஜயம் செய்த தருணத்தில் பௌத்த பிக்குகளின் ஆர்ப்பாட்டத்தினால் மிகுந்த பாதுகாப்புடனேயே அவர் பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருந்தது. குறித்த ஆர்ப்பாட்டங்கள் இலங்கைக்கு சர்வதேச ரீதியில் தலைகுனிவை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

0 Responses to வணக்கத்துக்குரிய பாப்பரசரை இலங்கை வருமாறு மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு