Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சீனக் குடிமக்களை அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவுக்கு ஆள் கடத்தல் செய்து அவர்களில் பலரை பாலியல் தொழிலாளிகளாக வலிந்து ஈடுபடுத்திய கும்பல் ஒன்றை சனிக்கிழமை ஸ்பெயினுலும் பிரான்ஸிலும் போலிசார் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப் பட்டவர்கள் மொத்தம் 75 இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஐரோப்பாவுக்கும் அமெரிக்காவுக்கும் இவ்வாறு சீனாவில் இருந்து ஆட்களைக் கடத்திக் கொண்டு வருவதற்கு இக்கும்பல் ஒருவருக்கு $66 000 அமெரிக்க டாலர்கள் விலை பேசியிருப்பதாகப் போலிசார் தெரிவித்துள்ளனர். ஸ்பெயின் போலிசால் கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்கள் இந்த நெட்வேர்க்கின் தலைவர்களாகவும் ஏனைய 49 பேர் அவர்களுக்குக் கீழ் வேலை செய்து வந்தவர்களாகவும் இருந்துள்ளனர். சுமார் 2 வருட கண்காணிப்பின் பின் பிரான்ஸில் கடத்தல் கும்பலைச் சேர்ந்த 24 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர்.

இக்கடத்தல் கும்பல் சீனாவை மையமாகக் கொண்டே இயங்குவதாகவும் இதனுடன் தொடர்புடையவர்களுக்கு அங்கிருந்தே கட்டளைகள் வருவதாகவும் கூடக் கூறப்பட்டுள்ளது. ஸ்பெயினில் கைது செய்யப் பட்டவர்கள் போலியான கடவுச்சீட்டு வைத்திருந்துள்ளனர்.

மேலும் இவர்களால் கூட்டி வரப்படும் சீன அப்பாவிகள் அங்கிருந்து அமெரிக்கா, ஸ்பெயின், பிரான்ஸ், கிரீஸ், இத்தாலி, பிரிட்டன், அயர்லாந்து மற்றும் துருக்கி ஆகிய நாடுகளுக்குக் கடத்தப் பட்டு வந்ததாகப் போலிசார் தெரிவித்துள்ளனர். மேலும் இவ்வாறு கூட்டி வரப்பட்டவர்கள் மிகச் சிறந்த வாழ்க்கை அளிக்கப் படும் என்ற ஏமாற்ற உறுதி மொழியை நம்பி வந்ததாகவும் ஆனால் பின்னர் வலிந்து திணிக்கப் பட்ட கூலி வேலைகளுக்கும், விபச்சாரத் தொழிலுக்கும் கட்டாயப் படுத்தப் பட்டதாகவும் கூறப்படுகின்றது.

0 Responses to மனிதக் கடத்தலுடன் தொடர்புடைய 75 பேர் பிரான்ஸிலும் ஸ்பெயினுலும் கைது

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com