தனி தெலுங்கனாவுக்கு எதிர்ப்பு
தெரிவித்து ஆந்திராவில் நடைபெற்று வரும் தொடர் வேலை நிறுத்தத்தால்,
பேருந்து போக்குவரத்துக்கள் நிறுத்தப்பட்டு, ரயில்களில் கூட்ட நெரிசல்
அலைமோதுகிறது.
ஆந்திர மாநிலத்தை பிரித்து, தனி தெலுங்கானா அமைக்க, ஆந்திராவில் எதிர்ப்பு வலுத்து வருகிறது. தனி தெலுங்கானா எதிர்ப்பாளர்கள் பலவேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனால் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களின் கூட்டம் கூட குறைந்து வருவதாக தேவஸ்தானம் தெரிவிக்கும் தகவலாக இருக்கிறது.
இந்நிலையில் அரசு ஊழியர்கள் தங்களது கால வரையற்ற வேலை நிறுத்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளனர். வருகிற 12ம் திகதி முதல் ஆந்திர அரசு ஊழியர்கள் சங்கம் தங்களது கால வரையற்ற வேலை நிறுத்த அறிவிப்பை தொடர உள்ளன. இந்நிலையில், தமிழகம் ஆந்திரா மற்றும் வெளி மாநிலங்களுக்கான பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
ஆந்திரா செல்லவேண்டிய வேற்று மாநில மக்கள், ரயில்களின் மூலமே ஆந்திராவுக்குள் பயணிக்க வேண்டியுள்ளது. இதனால் ரயில்களில் கூட்ட நெரிசல் அதிகரித்து உள்ளது. மேலும், அரசு ஊழியர்கள் தங்களது வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கிவிட்டால், ஆந்திராவின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள அரசு போக்குவரத்து கழகங்கள் முற்றிலுமாக தங்களது போக்குவரத்தை நிறுத்த அறிவித்துள்ளனர்.
இதனால், ஆந்திராவின் ரயில்களில் மேலும் மக்கள் நெரிசல் அதிகரிக்க வாய்ப்புக்கள் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 Responses to தொடர் வேலை நிறுத்தத்தால் ஆந்திர ரயில்களில் நெரிசல்