மேதக் தொகுதி எம்பியும், நடிகையுமான விஜயசாந்தி சமீபத்தில், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இந்நிலையில், நேற்று காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியை சந்தித்து பேசியுள்ளார் விஜயசாந்தி. எனவே, இவர் விரைவில் காங்கிரசில் சேருவார் என்று எதிர்பார்ப்புக்கள் அதிகமாகியுள்ளன.
மேதக் தொகுதியில் விஜயசாந்தி போட்டியிட கூடாது என்று, தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சித் தலைவர் சந்திரசேகர ராவ், கட்டளையிட்டதால், இது பிடிக்காத விஜயசாந்தி கட்சி நடவடிக்கைகளில் அதிக ஈடுபாடு காட்டவில்லை என்று தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், காங்கிரஸ் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் என்று, விஜய சாந்தியை, கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்தது, கட்சித் தலைமை.
இதை கண்டுகொள்ளாத விஜயசாந்தி தனது வீட்டில் வைத்துள்ள பழைய பேனர்களை அகற்றிவிட்டு, இந்திராகாந்தி, ராஜீவ் காந்தி, சோனியாகாந்தி உள்ள பேனர்களை வைத்துள்ளார். இப்போது, சோனியாகாந்தியுடனும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். அப்போது, விஜயசாந்தி பற்றி சோனியாகாந்தியிடம் காங்கிரஸ் மூத்த தலைவரான ரேணுகா சவுத்ரி, மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி வெற்றி பெற்ற மேதக் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் இந்த விஜயசாந்தி என்று விளக்கி கூறியதாகத் தெரிய வருகிறது.
சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரேணுகாசவுத்ரி, ''தெலுங்கனா அறிவிப்புக்காக மரியாதை நிமித்தமாக விஜயசாந்தி, காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாகாந்தியை சந்தித்தார்.கட்சியில் சேருவது குறித்து அவர்களிடமே நீங்கள் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.'' என்று கூறினார். இருப்பினும் நடிகை விஜயசாந்தி எதுவும் வாய் திறக்காமல் சென்று விட்டார். எனினும், அவர் விரைவில் காங்கிரசுடன் இணைவது குறித்து அறிவிப்பு வெளியிடுவார் என்றும் தகவல் தெரிய வருகிறது.

0 Responses to விரைவில் காங்கிரசில் இணைகிறார் விஜயசாந்தி;சோனியாகாந்தியுடன் சந்திப்பு