Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சவுதி அரேபியாவில் வேலை இழந்து வரும் தமிழர்கள் உட்பட இந்தியர்களை பாதுகாப்புடன்  அழைத்து வரும் நடவடிக்கை குறித்து, மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சவுதி அரேபிய அரசு, கொண்டுவந்திருக்கும் புது சட்டத்தின்படி, ஒரு நிறுவனத்தில் 10 வெளிநாட்டவர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுத்தால், ஒரு சவுதி அரேபியருக்கு வேலை வாய்ப்பு அளிக்க வேண்டும், என்பதே ஆகும்.

இந்த புதிய சட்டத்தால், பல ஆயிர கணக்கான தமிழர்கள் உட்பட, லட்சக் கணக்கான இந்தியர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் அனைவரையும் பாதுகாப்பாக தனியான ஒரு கப்பல், அல்லது தனியான விமானங்கள் மூலம் இந்தியாவுக்கு அழைத்து வர ஆவன செய்ய வேண்டும் என்கிற பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனு இன்று நீதிபதிகள் அகர்வால், மற்றும் சத்திய நாராயணா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், மனுதாரரின் மனுவுக்கு இன்னும் 2 வார காலத்துக்குள் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் என்று,  உத்தரவிட்டுள்ளனர்.

0 Responses to சவுதி அரேபியாவில் வேலையிழந்து வரும் இந்தியர்களை பாதுகாப்புடன் அழைத்து வரவேண்டும்! : சென்னை உயர் நீதிமன்றம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com