Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கிஸ்துவார் மத கலவரம் தொடர்பாக முழு விவர அறிக்கைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று, காஷ்மீர் மாநில சட்டப்பேரவை தலைமை செயலாளருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கிஸ்துவாரில் இரு தரப்பினருக்கு இடையே மத கலவரம் மூண்டது. கடந்த சில நாட்களாக அங்கு நடந்து வரும் மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட போதிலும், கலவரம் குறைந்த பாடில்லை. இதில் ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வீடுகள், கடைகள் சூறையாடப்பட்டன.வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இந்த  தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. 8 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் கிஸ்துவார் மாவட்டத்தில் நடந்த கலவரம் தொடர்பாக உச்ச நீதி மன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் கிஸ்துவாரில் நடைபெறும் மோதல் மற்றும் அதைத் தடுக்க மாநில அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பாக, மாநில சட்டபேரவை தலைமை செயலாளர் விரிவாக அறிக்கைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

0 Responses to கிஸ்துவார் மத கலவரம் ; அறிக்கை தாக்கலுக்கு உச்ச உத்தரவு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com