Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வடக்கு மாகாண சபைக்கான தேர்தல்கள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் அங்கு தேர்தல் வன்முறைகள் அதிகரித்து செல்வதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

குறிப்பாக,  எதிர்த்தரப்பு வேட்பாளர்கள் மற்றும் ஆதாரவாளர்கள் மீது தாக்குதல்களும்- அச்சுறுத்தல்களும் விடுக்கப்படுவதாக அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தின் நெடுந்தீவு பகுதியில் தேர்தல் பிரசார பணிகளில் ஈடுபட்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் விந்தன் கனகரத்தினத்தின் ஆதரவாளர்கள் மீது நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை இரவு இனந்தெரியாத குழுவொன்றினால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

குறித்த குற்றச்செயல்களில் ஆளும் ஐக்கிய சுதந்திரக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ஈழமக்கள் ஜனநாயக் கட்சியின் (ஈபிடிபி) குண்டர்களே ஈடுபட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீவக அமைப்பாளர் பேர்னாட் குற்றஞ்சாட்டியுள்ளார். இப்படியான அச்சுறுத்தல் மிக்க தாக்குதல்கள் தொடர்வதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு மாகாணத்தில் பல பகுதிகளிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்களை அச்சுறுத்தும் வேலைகளில் இனந்தெரியாத குழுக்கள் ஈடுபடுவதாகவும்- மக்களை குழப்பும் முகமாக துண்டுப்பிரசுரங்களை வெளியிடுவதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

மோதல்கள் முடிவுக்கு வந்து நான்கு வருடங்களுக்குப் பின்னர் வடக்கு மாகாண சபைக்கான தேர்தலை அரசாங்கம் நடத்துகிறது. ஆனாலும், நீதியாகவும், சுதந்திரமாகவும் தேர்தலை எதிர்கொள்ள முடியாத சூழல் உள்ளதாக எதிர்த்தரப்பு உறுப்பினர்கள் தொடர்ந்தும் குற்றஞ்சாட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to வடக்கில் தேர்தல் வன்முறை: த .தே. கூ .உறுப்பினர்கள் மீது தாக்குதல்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com