Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

லண்டனில் உள்ள மிக முக்கியமான விமான நிலையமான ஹீத்ருவுக்கு அல்கொய்தா இயக்கத்தினரிடம் இருந்து வெடிகுண்டுத் தாக்குதல் மிரட்டல் வந்ததை புலனாய்வு அமைப்பு கண்டு பிடித்து எச்சரித்ததை அடுத்து அங்கு பாதுகாப்பு பலப் படுத்தப் பட்டுள்ளது.

அல்கொய்தா இயக்கத்தைச் சேர்ந்த தற்கொலைப் பெண் போராளிகள் தமது செயற்கை மார்பகத்தில் பொருத்தப் பட்ட வெடி குண்டுகளுடன் இத்தாக்குதலை மேற்கொள்ளலாம் எனத் தெரிய வந்துள்ளது.

அல்கொய்தா இயக்கத்தின் பிரதான வெடிகுண்டுத் தயாரிப்பாளர் இப்ராஹிம் அல்-அசிரி என்பவர் விமான நிலையங்களில் உள்ள ஸ்கேனர்களில் தென்படாதவாறு மனித உடலில் மறைத்து வைத்து கொண்டு செல்லக் கூடிய வெடிகுண்டுகளைத் தயாரிப்பதில் நிபுணராவார். இவரே பெண்களின் செயற்கை மார்பகத்தில் பொருத்தி மறைத்துச் செல்லக் கூடிய இந்த வெடிகுண்டுகளை தயாரித்துள்ளார்.

இத்தாக்குதல் அச்சம் குறித்து முன்னரே எச்சரிக்கப் பட்டதால் ஹீத்ரோ விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனைகளும், கண்காணிப்பு கமெராக்களும் அதிகரிக்கப் பட்டுள்ளன. கடந்த மாதம் ஈராக், லிபியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் தொடர்ச்சியாக இடம்பெற்ற சிறைச்சாலைத் தகர்ப்புக்களின் மூலம் பல முக்கிய தீவிரவாதிகள் தப்பிச் சென்றதால் புதிய தீவிரவாதத் தாக்குதல்கள் திட்டமிடப்படலாம் எனப் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகின்றது. இதனால் விடப்பட்ட இன்டெர்போலின் எச்சரிக்கையைத் தொடர்ந்து பிரிட்டன் அரசு தனது வெளிநாட்டு செயற்திட்டங்கள் சிலவற்றையும் திடிரென ரத்து செய்துள்ளது.

கடந்த சில வருடங்களாக ஆப்கானிஸ்தான், கிரீஸ், இந்தியா, கென்யா, லிபியா, பாகிஸ்தான், பெரு, சவுதி அரேபியா, சிரியா, தன்சானியா ஆகிய நாடுகளில் இள்ள முக்கிய அரச அலுவலகங்களில் தீவிரவாதிகளின் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. இதனால் ஆயுதம் தாங்கிய பழங்குடியினர், குற்றவாளிகள் மற்றும் தீவிரவாதிகளிடம் இருந்து மிகப்பாரிய கடத்தல் அச்சுறுத்தல் இருப்பதாகப்- பிரிட்டனின் வெளியுறவுத்துறை அலுவலகம் தனது மக்களிடமும் சுற்றுலாப் பயணிகளிடமும் அறிவுறுத்தி வருகின்றது.

0 Responses to லண்டன் ஹீத்ரு விமானநிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்:கூடுதல் பாதுகாப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com