இலங்கையில் மத சகிப்புத் தன்மையற்ற
சம்பவங்கள் இடம்பெறுவதாக பாப்பரசரின் இலங்கைக்கான பிரதிநிதி அதி
வணக்கத்துக்குரிய ஜோசப் ஸ்பிட்டேரி ஆண்டகை தெரிவித்துள்ளார். அத்தோடு,
இலங்கையில் கிறிஸ்தவர்களின் நிலை தொடர்பிலும் அதிக கரிசனை கொண்டுள்ளதாக
குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் கத்தோலிக்க பேராலயங்களில் வரலாற்று சிறப்புமிக்கதாக கருதப்படும் மன்னார் மடு மாதாவின் ஆவணி மாதத் திருவிழா இன்று வியாழக்கிழமை திருப்பலிப் பூசையுடன் நிறைவுபெற்றது.
மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்களின் தலைமையில் நடைபெற்ற திருப்பலி பூசைகளில், பாப்பரசரின் இலங்கைக்கான பிரதிநிதி அதி வணக்கத்துக்குரிய ஜோசப் ஸ்பிட்டேரி ஆண்டகையும், அநுராதபுரம் மறை மாவட்ட ஆயர் நோபர் ஆண்டனி ஆண்டகையும் கூட்டாக இறுதி திருப்பலியை ஒப்புக்கொடுத்தனர்.
அதன்போது அடியார்களுக்கு வழங்கிய கருத்துரையின் போதே, இலங்கையில் மத சகிப்புத்தன்மையற்ற சம்பவங்கள் இடம்பெறுவதாக பாப்பரசரின் இலங்கைக்கான பிரதிநிதி அவர்கள் சுட்டிக்காட்டினார். அத்தோடு, மதங்கள் மீதான அச்சுறுத்தலினூடு தீய சக்திகள் தலையெடுப்பதாகவும் குறிப்பிட்டார்.

0 Responses to இலங்கையில் மத சகிப்புத்தன்மையற்ற சம்பவங்கள்:பாப்பரசரின் பிரதிநிதி கரிசனை