Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அதிகாலை வாக்கிங் போன வக்கீல் மர்மமான முறையில் இறந்துகிடக்க சேலம் முழுக்க பரபரப்பானது.

சேலம் பிரட்ஸ் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் வழக்குரைஞர் ஆர்.இளம்வழுதி (45). இவரது மனைவி கவிதா (35). இவர்களுக்கு பரத் (12), சரத் (6) என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். இளம்வழுதி தினசரி காலை 5 மணியளவில் வீட்டிலிருந்து கிளம்பி ஆட்சியர் அலுவலகம் வழியாக நடைப் பயிற்சி மேற்கொள்வது வழக்கம். இவருடன் இவரது நண்பர் ரஜினி என்பவரும் நடைப் பயிற்சிக்குச் செல்வாராம்.

இந்த நிலையில் ரஜினி திங்கள்கிழமை காலை 5.15 மணியளவில் இளம்வழுதிக்கு செல்பேசியில் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் நீண்ட நேரமாக செல்பேசி ஒலித்தும் அவர் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் தலையில் பலத்த காயங்களுடன் இறந்து கிடந்தது வழக்குரைஞர் இளம்வழுதி என்பது தெரிய வந்தது. இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதும் மாநகர காவல் ஆணையர் கே.சி.மஹாலி, துணை ஆணையர்கள் ஏ.ஜி.பாபு, பிரபாகரன் உள்ளிட்டோர் விரைந்து வந்து சடலத்தைப் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதையடுத்து இளம்வழுதியின் உடல் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

முதல்கட்ட விசாரணையில் நடைப்பயிற்சி மேற்கொண்ட இளம்வழுதியின் மீது அந்த வழியாகச் சென்ற வாகனம் மோதியிருக்கலாம் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

ஆனால் இளம்வழுதி உறவினர்களோ 'ஆட்சியர் அலுவலகம் வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற வினோத் (28) என்பவர், ஆட்சியர் அலுவலகத்தின் இரண்டாவது நுழைவு வாயில் பகுதியில் கால்நடை மருத்துவமனை எதிரில் ஒருவர் ரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டுள்ளார்.
உடனடியாக அவர் ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் காவலர்களை சந்தித்து தகவலைத் தெரிவிக்க முயன்றுள்ளார். ஆனால் அங்கு யாரும் இல்லாததால் நகர காவல் நிலையத்துக்கு சென்று தகவல் தெரிவித்துள்ளார். 

அப்புறம் தான் போலீஸ் வந்தது. இளம்வழுதியின் நெற்றியில் வலது கண்ணுக்கு மேல் ஆழமாக ஒரு வெட்டுக் காயமும், பின் மண்டையில் இரண்டு இடங்களில் வெட்டுக் காயங்களும் இருந்துள்ளன.

இதனால் அவரை மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்திருக்கலாம் ஆனா போலீஸ் இதை ஊத்தி மூட பாக்குது' என்றனர் கண்ணீரோடு.

செய்தி, படங்கள்: இளங்கோவன் 

0 Responses to வக்கீல் கொலையை விபத்தாக மாற்ற முயற்சி! உறவினர்கள் காவல்துறை மீது குற்றச்சாட்டு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com