Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

04.08.2013 அன்று டென்மார்க் Vidbjerg cup 2013 ன் 13 மற்றும் 15
வயதிற்குட்பட்டோரின் அறையிருதில் விளையாடிய தமிழீழீ அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன.

அதனைத்தொடர்ந்து மதியம் 11:30 மணிக்கு
இறுதிப்போட்டியில் Germanyயுடன் விளையாடிய 13 வயதிற்குட்பட்டோரின்

தமிழீழீ அணி 1 : 5 என்ற கணக்குடனும் Norwayயுடன் விளையாடிய 15
வயதிற்குட்பட்டோரின் தமிழீழீ அணி 2 : 3 என்ற கணக்குடனும்
வெற்றிக்கிண்ணத்தை தனதாக்கியது.

அதனைத்தொடர்ந்து மாலை 15:00 மணிக்கு வீரர்களுக்கும் வீரர்களின்
பெற்றோர்களுக்குமான ஒன்றுகூடல் நடைபெற்றது. இவ் ஒன்றுகூடலில் வீரர்கள்
கௌரவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அனைவரினதும் கருத்துக்கள் கேட்கப்பட்டன.
மாலை 17:00 மணிக்கு நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடல்
ஒலிக்கப்பட்டு தமிழரின் தாரக மந்திரத்தை உரக்கச் சொல்லி நிகழ்ச்சி
நிறைவுற்றது.

15 வயதிற்குட்பட்ட தமிழீழ அணி 2 : 1 Aabyhøj IF (Danmark)

காலை 09:45 மணிக்கு Aabyhøj IF அணிக்கும் தமிழீழ அணிக்கும் நடந்த
அறையிருதி உதை பந்தாட்ட போட்டியில் Aabyhøj IF அணி 1 இலக்கையும் தமிழீழ
அணி 2 இலக்குகளையும் எடுத்து இந்த போட்டியில் வென்று இறுதிப்போட்டிக்கு
தகுதி பெற்றனர்.

வைஸ்ணவன் சற்குணநாதன் 1 இலக்கையும், சங்கீத் சத்தியமூர்த்தி 1
இலக்கையும், எடுத்து அணியின் வெற்றிக்கு வித்திட்டனர்

13 வயதிற்குட்பட்ட தமிழீழ அணி 3 : 3 Ranum-Overlade IK Vest (Danmark)

காலை 09:45 மணிக்கு Ranum-Overlade IK Vest அணிக்கும் தமிழீழ அணிக்கும்
நடந்த அறையிருதி உதை பந்தாட்ட போட்டியில் Ranum-Overlade IK Vest 3
இலக்குகளையும் தமிழீழ அணி 3 இலக்குகளையும் எடுத்து இந்த போட்டியில்
புள்ளிகளின் அடிப்படையில் வென்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றனர்.

சாரங்கன் சிவநாதன் 1 இலக்கையும், தினோஜன் திலீபன் 1 இலக்கையும், அபிநயன்
ராஜசிங்கம் 1 இலக்கையும் எடுத்து அணியின் வெற்றிக்கு வித்திட்டனர்.

15 வயதிற்குட்பட்ட தமிழீழ அணி 3 : 2 Bogafjell IL (Norway)

மதியம் 11:30 மணிக்கு Bogafjell IL அணிக்கும் தமிழீழ அணிக்கும் நடந்த
இறுதி உதை பந்தாட்ட போட்டியில் Bogafjell IL அணி 2 இலக்குகளையும் தமிழீழ
அணி 3 இலக்குகளையும் எடுத்து இந்த போட்டியில் வென்று கிண்ணத்தை
தனதாக்கினர்.

வைஸ்ணவன் சற்குணநாதன் 2 இலக்குகளையும், கிரிஸ்சாந்தன் 1 இலக்கையும்
எடுத்து அணியின் வெற்றிக்கு வித்திட்டனர்

13 வயதிற்குட்பட்ட தமிழீழ அணி 3 : 2 SV Borussia Moehnsen (Germany)

மதியம் 11:30 மணிக்கு SV Borussia Moehnsen அணிக்கும் தமிழீழ அணிக்கும்
நடந்த இறுதி உதை பந்தாட்ட போட்டியில் SV Borussia Moehnsen 1
இலக்குகளையும் தமிழீழ அணி 5 இலக்குகளையும் எடுத்து இந்த போட்டியில்
வென்று கிண்ணத்தை தனதாக்கினர்.

சாரங்கன் சிவநாதன் 3 இலக்குகளையும், அபிநயன் ராஜசிங்கம் 1 இலக்கையும்
எடுத்து அணியின் வெற்றிக்கு வித்திட்டனர்.


0 Responses to வெற்றிக்கிண்ணத்தை தனதாக்கிய தமிழீழீ அணிகள்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com