திருச்சியில்
தண்டவாளத்தில் உடல் சிதறி பள்ளி மாணவி சுல்தானா பலியான வழக்கில் போதிய ஆதார
ங்கள் கிடைக்காததால் போலீசார் திணறி வருகின்றனர்.
திருச்சி
காஜாமலை காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்த அக்பர் பாஷா மகள் தவ்பீக் சுல்
தானா (13). தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்த சுல்தானாவை கடந்த
13ம் தேதி முதல் காணவில்லை. இது குறித்த புகாரின்பேரில் பாலக்கரை போலீசார்
வழக்குப்பதிந்து தேடினர்.
14ம்
தேதி காலை ரெட்டைமலை அருகில் உள்ள ஆளில்லா ரயில்வே கேட் அருகே
தண்டவாளத்தில் உடல் சிதறிய நிலையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து ரயில்வே
போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர்.
விசாரணை மிக மந்தமாக நடந்ததால் இவ்வழக்கை திருச்சி மாநகர போலீசார் எடுத்து விசாரிக்கும்படி கடந்த 16ம் தேதி டிஜிபி அலுவலகத்திலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து இவ்வழக்கு ஆவணங்களை ரயில்வே போலீசார் மாநகர போலீசிடம் வழங்கினர். அதன்பேரில் சுல்தானாவின் உடல் கிடந்த இடம் எடமலைப்பட்டிபுதூர் போலீஸ் ஸ்டேசனுக்கு உட்பட்ட பகுதி என்பதால் அங்கு வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை துவங்கியது.
விசாரணை மிக மந்தமாக நடந்ததால் இவ்வழக்கை திருச்சி மாநகர போலீசார் எடுத்து விசாரிக்கும்படி கடந்த 16ம் தேதி டிஜிபி அலுவலகத்திலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து இவ்வழக்கு ஆவணங்களை ரயில்வே போலீசார் மாநகர போலீசிடம் வழங்கினர். அதன்பேரில் சுல்தானாவின் உடல் கிடந்த இடம் எடமலைப்பட்டிபுதூர் போலீஸ் ஸ்டேசனுக்கு உட்பட்ட பகுதி என்பதால் அங்கு வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை துவங்கியது.
ஸ்ரீரங்கம்
உதவி கமிஷனர் ஜெயச்சந்திரன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் விஜயபாஸ்கர்,
சேரன், சித்ரா கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இதில் சுல்தானா நோட்டில்
எழுதி வைத்திருந்த செல்போன் எண்ணைக் கொண்டு விசாரித்தனர். அதன்
அடிப்படையில் காஜாமலையை சேர்ந்த இன்ஜினியரிங் மாணவர்களான உமர்பாரூக்,
பொன்மலைப்பட்டியை சேர்ந்த வினோத்குமார், எ.புதூரை சேர்ந்த விக்கி (எ)
விக்னேஷ், சுசில், சகாய அலெக்ஸ் ஆகிய 5 பேரை பிடித்து தனித்தனியாக ரகசிய
இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.
இது
தவிர சுல்தானாவின் தாய் மெகபூனிசாவிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் மாணவர்கள் ஒருவரையொருவர் மாறி, மாறி குற்றம் சாட்டி வந்தனர்.
இதற்கிடையில்
நேற்று முன்தினம் இரவு உமர்பாரூக், வினோத்குமார் ஆகிய இருவரிடமும் எழுதி
வாங்கிக்கொண்டு, விசாரணைக்கு தேவைப்பட்டால் வரவேண்டும் என கூறி போலீசார்
அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சுசில், அலெக்ஸ், விக்னேஷ் ஆகிய 3 பேரை
கே.கே.நகர் போலீஸ் ஸ்டேஷனில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனாலும்,
எவ்வித துப்பும் கிடைக்காமல் போலீசார் திணறி வருகின்றனர்.
குறிப்பாக
தண்டவாளத்தில் கிடந்த சுல்தானா உடலில் மார்புக்கு கீழ் உள்ள பகுதிகள்
எதுவும் காணப்படவில்லை. கால்கள் மட்டுமே கிடைத்தன. இடைப்பட்ட பாகங்கள்
எதுவும் கிடைக்கவில்லை. இதன் காரணமாக பிரேத பரிசோதனையில் பாலியல்
துன்பத்திற்கு உட்படுத்தப்பட்டதற்கான தடயங்கள் எதுவும் கிடைக்கவில்லை.
அதேபோல்
பிடிபட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையிலும் சுல்தானாவை அழைத்து சென்றது
மற்றும் அவர்கள் சம்மந்தப்பட்ட நேரங்களில் குறிப்பிட்ட ரயில்வே தண்டவாள
பகுதியில் இருந்ததற்கான ஆதாரங் களை போலீசாரால் திரட்ட முடியாமல்
திணறுகின்றனர். மேலும், சுல்தானா காணாமல் போன தாக பாலக்கரை போலீசில்
வழக்குப்பதிவு செய்யப் பட்டிருக்கும் நிலையில், அவரது உடல்
கண்டெடுக்கப்பட்ட இடத்தை வைத்து எடமலைப்பட்டிபுதூர் போலீசில் அதுதொடர்பாக
மேலும் வழக்குப்பதிவு செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதுபற்றி
ஆலோசித்த போலீஸ் உயர் அதிகாரிகள், எடமலைப்பட்டிபுதூரில் பதிவு செய்த
வழக்கை ரத்து செய்துவிட்டு அந்த வழக்கின் ஆவணங்களை பாலக்கரை போலீசிடம்
ஒப்படைக்குமாறு உத்தரவிட்டனர்.
இதையடுத்து இவ்வழக்கு ஆவணங்கள் அனைத்தும் அங்கிருந்து பாலக்கரை போலீசுக்கு நேற்று முன் தினம் மாற்றப்பட்டு, கடந்த 13ம் தேதி சிறுமி மாயமானது தொடர்பான வழக்குடன் இணைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து இவ்வழக்கு ஆவணங்கள் அனைத்தும் அங்கிருந்து பாலக்கரை போலீசுக்கு நேற்று முன் தினம் மாற்றப்பட்டு, கடந்த 13ம் தேதி சிறுமி மாயமானது தொடர்பான வழக்குடன் இணைக்கப்பட்டுள்ளது.
சுல்தானாவின்
தந்தை அக்பர்பாஷா சவுதியில் இருக்கிறார். மகள் இறுதி சடங்கிற்கு வருவதாக
கூறியிருந்த அவர் இதுவரை வரவில்லை. இதுகுறித்து அவரை தொடர்பு கொண்டு
கேட்டபோது, தனக்கு விடுமுறை கிடைக்கவில்லை என பதில் கூறினார் என போலீசார்
தெரிவித்தனர். அவர் ஏன் வரவில்லை என்பது குறித்த உண்மையான தகவல்களை திரட்ட
போலீசார் முடிவு செய்துள்ளனர்.
-ஜே.டி.ஆர்.
0 Responses to மாணவி சுல்தானா வழக்கில் ஆதாரங்கள் கிடைக்காததால் போலீசார் திணறல் (படங்கள் இணைப்பு)