Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இயக்குனர் சேரனின் மகள் தாமினி தமது தந்தையுடன் செல்ல விருப்பம் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒப்புதல் அளித்துள்ளார். மேலும் வழக்கு விசாரணை  நடைபெற்று வருகிறது.

இயக்குனர் சேரனின் மகள் தாமினிக்கும், திரைப்பட நடன கலைஞர் சந்துருவுக்கும் இடையே காதல் மலர்ந்ததாகவும், இதனால் தாமினி வீட்டை விட்டு வெளியேறினார் என்றும் கூறப்படுகிறது. முதலில் தாமினியின் காதலை ஏற்று கொண்ட சேரன், பின்னர் இருவரின் காதலையும் மறுத்து வந்ததால் தாமினி வீட்டை விட்டு சென்று விட்டார்.

சென்னை மாநகராட்சி ஆணையரிடம் தாமினி புகார் கொடுத்ததன் பேரில் இந்த விவகாரம் பரபரப்பானது. இரண்டு முறையும் நீதிமன்றத்தில் ஆஜரான தாமினி, காதலன் சந்துருவுடன் செல்லவே விருப்பம் என்று கூற, தாமினியை அவர் படித்த பள்ளியின் தாளாளர் வீட்டில் இது நாள்வரை தங்க வைக்க உத்தரவிட்டனர் நீதிபதிகள்.

இதை அடுத்து இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தாமினி, சந்துருவின் தாயார், சேரன் தரப்பினர் ஆஜரானார்கள். வழக்கு விசாரணைக்கு வந்த போது, தாமினி தமது தந்தையுடன் செல்லவே விருப்பம் என்று கூறியுள்ளார். ஆனால், சந்துரு தரப்பு வழக்கறிஞர், முதலில் சந்துருவுடன் செல்ல விருப்பம் என்று தாமினி தெரிவித்த போது, அதற்கு சம்மதம் தெரிவிக்காத நீதிபதிகள், இப்போது மட்டும் உடனே சம்மதம் தெரிவிப்பது என்பது சரியாகாது என்று வாதாடி வருகின்றார். இந்த வழக்கின் முடிவு இன்று பிற்பகல் தெரியவரும் எனத் தெரிகிறது.

0 Responses to இயக்குனர் சேரன் மகள் தாமினி தந்தையுடன் செல்ல விருப்பம் : சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒப்புதல்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com