Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஈழ நேரு, செந்தூரன், இத்தாலியராஜன் (எ) சுந்தரராஜன் ஆகிய மூன்று இலங்கைத்தமிழர்களை திரும்ப அவர்கள் நாட்டிற்கு அனுப்பக்கூடாது என வலியுறுத்தி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பிரதமர் மன்மோகன் சிங்கிற்குக் கடிதம் எழுதியிருக்கிறார்.

இவர்களில் சுந்தரராஜன், சில இலங்கைத் தமிழ் அகதிகளை பயண ஆவணங்களின்றி ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பமுயன்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு 11 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்று புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். அவர் தற்போது மேன் முறையீடு செய்திருக்கிறார்.

ஈழநேரு தற்போது திருச்சி சிறையில் இருக்கிறார். அவர் ஒருவரை ஒரு இலட்சம் ரூபாய் அளவு ஏமாற்றியதாக வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. செங்கல்பட்டு சிறப்பு முகாமிலிருந்து பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு விடுதலை செய்யப்பட்ட செந்தூரன் தற்போது தாம்பரத்தில் வசித்து வருகிறார்.

அவர்கள் மூவரும் இலங்கைக்குத் திரும்ப அனுப்பப்படவிருக்கின்றனர் என்று செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், அவர்கள் அவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டால் அவர்கள் உயிருக்கே ஆபத்து ஏற்படக்கூடும் என்கிறார் வைகோ.

மேலும் இலங்கைத் தமிழர்களை அவர்களது விருப்பத்துக்கு மாறாக, நாடு கடத்தக் கூடாது என்று, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருப்பதாகவும் வைகோ கூறுகிறார்.

கடந்த 20 ஆண்டுகளில் இவ்வாறு இலங்கைத் தமிழ் அகதி எவரும் கட்டாயமாக நாடு கடத்தப்பட்டதில்லை எனவும் சுட்டிக்காட்டும் அவர், அம்மூவரையும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பக் கூடாது என வலியுறுத்தி, பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் மற்றும் உள்துறை அமைச்சர் சுசில் குமார் ஷிண்டே ஆகியோருக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்.

- நன்றி பிபிசி

0 Responses to மூன்று இலங்கைத் தமிழர்களை திருப்பி அனுப்பக் கூடாது : பிரதமருக்கு வைகோ கடிதம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com