பொதுநலவாய அமைப்பில் அங்கம்
வகிக்கும் 15 நாடுகளைச் சேர்ந்த 70 பேருக்கும் அதிகமான இராஜதந்திரிகள்
அண்மைய நாட்களில் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர்.
பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டுக்கான முன்னேற்பாடுகள் தொடர்பில் அறிந்து கொள்வதற்காகவே அவர்கள் இலங்கை வந்துள்ளதாக பொதுநலவாய மாநாடுகளுக்கான செயலணி அறித்துள்ளது.
இலங்கையின் பாதுகாப்பு நிலவரங்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இராஜதந்திரிகள் கவனம் செலுத்தியுள்ளதுடன், பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டின் அங்குரார்பண நிகழ்வுகள் நடைபெறவுள்ள கொழும்பு மஹிந்த ராஜபக்ஷ தாமரைத்தடாக வளாகம் மற்றும் மத்தல சர்வதேச விமான நிலைய வளாகம் என்பன பற்றியும் கவனம் செலுத்தி ஆராய்ந்துள்ளனர்.
பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாடு முதற்தடவையாக இலங்கையில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ளது. இதில், 80க்கும் அதிகமான நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்ப்பதாக இலங்கை அரசாங்கம் ஏற்கனவே அறிவித்திருந்தது.

0 Responses to பொதுநலவாய அமைப்பு நாடுகளின் பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம்