Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஜூலை மாதம் எகிப்தில் பதவியில் இருந்து வலுக்கட்டாயமாக நீக்கப் பட்ட முன்னால் அதிபர் மொஹம்மட் மோர்ஸியின் ஆதரவாளர்கள் இராணுவத்தினருடன் கடுமையாகப் போராடி வருகின்றனர்.

கடந்த இரு நாட்களில் கெய்ரோவில் அமைந்துள்ள முஸ்லிம் சகோதரத்துவக் கட்சியின் இரு பாசறைகளை வலுக்கட்டாயமாக இராணுவத்தினர் அகற்ற முற்பட்ட போது வெடித்த கலவரத்தில் குறைந்தது 638 பேர் வரை பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகின்றது. இந்நிலையில் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு தலைநகர் கெய்ரோவில் மிகப் பெரிய அணிவகுப்பு நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.

மேலும் வெள்ளிக்கிழமை தொழுகை முடிந்ததும் நகரின் ஏனைய பள்ளிவாசல்களுக்குள் அமைந்துள்ள மத்திய ராம்செஸ் சதுக்கத்தைக் கைப்பற்ற இவர்கள் திட்டமிட்டுள்ளனர். எகிப்தில் கலவரங்களை அடக்கத் தற்போது ஊரடங்குச் சட்டம் அமுலில் இருப்பதால் தற்பாதுகாப்புக்காக போலிசார் வெடிமருந்துகளைப் பாவிக்கும் உரிமையுடையாவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ராம்செஸ் சதுக்கத்தில் மிகப் பெரும் அழுத்தம் நிலவுவதாகவும் அங்கு தங்குவது மிக ஆபத்தானது என்பதாலும் மக்கள் கூட்டத்தை அந்த இடத்திலிருந்து வெளியேறுமாறு அங்கிருக்கும் பிபிசி இன் நிருபர் மக்களை வேண்டியுள்ளார்.

எனினும் இராணுவம் பொது மக்களைப் பெருமளவு கொன்று குவித்திருப்பதால் முஸ்லிம் சகோதரத்துவக் கட்சி வெள்ளிக்கிழமை பிரார்த்தனைக்குப் பின் தனது ஆதரவாளர்களைக் கொண்டு கெய்ரோ நகர வீதிகளில் மிகப் பெரிய எண்ணிக்கையில் கடும் கோபத்துடன் ஆர்ப்பாட்டம் நடத்த அழைப்பு விடுத்துள்ளது.

0 Responses to எகிப்து விவகாரம்: இணக்கத்துக்கு வர மறுக்கும் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு அணிவகுப்பு நடத்தத் திட்டம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com