Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழ்நாட்டில் நரிக்குறவர்களையும் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று, திமுக தலைவர் கருணாநிதி, கடந்த வாரம், பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கிஷோர் சந்திரா தேவுக்கு கடிதம் எழுதியிருந்தார். இதற்கு மத்திய அமைச்சர் கருணாநிதிக்கு பதில் எழுதியுள்ளதாகவும் தெரிய வருகிறது.

மத்திய நலத்துறை அமைச்சர் கிஷோர் சந்திரா தேவ், தாம் கருணாநிதிக்கு எழுதியுள்ள பதில் கடிதத்தில், 'நரிக்குறவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்கிற தங்களின் கோரிக்கையை எங்களது அமைச்சகம் மறு பரிசீலனை செய்து வருகிறது. நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகளின் படி, உங்களுடைய கோரிக்கைக்கு இந்திய ரிஜிஸ்டர் ஜெனரல், தேசிய பழங்குடியினர் நல ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்த விஷயத்தில் உரிய முறைகளின் படி, உங்கள் கோரிக்கை மேலும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

முடிவு எடுக்கப்பட்டவுடன் மத்திய அமைச்சரவைக்கு எடுத்து செல்லப்பட்டு, ஒப்புதல் பெறப்படும். ஒப்புதல் பெற்றவுடன் தமிழ்நாட்டில் உள்ள நரிக்குறவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கும் வகையில் உரிய சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படும்.' என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to தமிழ்நாட்டில் நரிக்குறவர்கள் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்படுவார்களா?:கிஷோர் சந்திரா தேவ் பதில்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com