Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் வனத்துறைக்கு சொந்தமான தைல மரக்காட்டில் 30 வயது மதிக்க தக்க ஆண், பெண் சடலங்கள் கட்டிப்பிடித்த நிலையில் கிடந்தது. அந்த பெண்ணின் உடலில் பல இடங்களிலும் கூர்மையான ஆயுதம் கொண்டு தாக்கிய காயங்களில் இருந்து ரத்தம் வெளியேறியுள்ளது. அருகில் குருனை மருந்து (விஷம்) இருந்தது.


   இந்த ஜோடி யார் என்று அருகில் உள்ள கிராமத்தினர் வந்து பார்த்தனர். அப்போது அந்த இளைஞர் கொத்தக் கோட்டை வடக்கு குமரேசன் என்பதும். இவர் திருப்பூரில் வேலை செய்து வந்தார் என்பதும் தெரிய வந்தது.   அந்த இளைஞருக்கு திருமணம் ஆகவில்லை. ஆனால் அந்த பெண் திருப்பூரில் இருந்து அழைத்து வரப்பட்ட பெண் என்று தெரிந்தது.


   இவர்களில் அந்த பெண்ணுக்கு மட்டும் பலமாக தாக்கப்பட்ட காயங்கள் உள்ளது. ஆனால் அந்த இளைஞருக்க எந்த காயமும். இல்லை. ஆனால் அவர்கள் உடல் மீது அருகில் இருந்த தைல மர அலைகள் கொத்தாக ஒடித்து மூடப்பட்டிருந்தது. அந்த இடம் வரை ஒரு லோடு ஆட்டோ வந்து திரும்பிய தடயம் உள்ளது.


   இவர்கள் காட்டுப் பக்கம் ஒதுங்கியதை பார்த்த சிலர்,  அந்த பெண்ணை பலமாக தாக்கி பலாத்காரம் செய்துவிட்டு அந்த இளைஞரையும் கொலை செய்துவிட்டு தப்பி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.


   இந்த சம்பவம் குறித்து போலிசார் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் மோப்ப நாய் வரவழைக் கப்பட்டுள்ளது.


   புதுக்கோட்டை மாவட்டத்தில் இது போன்ற சம்பவம் தொடந்து நடந்து வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

                - செம்பருத்தி




0 Responses to திருவரங்குளம் காட்டில் ஆண்- பெண் சடலங்கள் (படங்கள் இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com