Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கைத்தீவில் சுதந்திர தமிழீழத்துக்கான போர்தான் ஓய்ந்ததே அன்றி போராட்டம் அல்ல என்பதனை முரசறைந்து முகிழ்ந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது பாராளுமன்ற பணிக்காலம் நிறைவுகாணவிருக்கின்றது.

தமிழீழத் தாயகத்தில் நிறுவப்பட்டிருந்த நடைமுறைத் தமிழீழ அரசினை மே 2009ம் ஆண்டில், பெரும் இனஅழிப்பு ஒன்றின் ஊடாக அழித்து விட்டதாக சிங்களம் யுத்தவெற்றி களிப்பில் இருந்தவேளை, இலங்கைத்தீவுக்கு வெளியே பரந்து வாழ்கின்ற புலம்பெயர் தமிழர்கள், தங்களின் அரசியல் அபிலாசையினை சனநாயக முறையிலான தேர்தல் ஒன்றின் ஊடாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினை உருவாக்கிக் கொண்டனர்.

12க்கும் மேற்பட்ட நாடுகளில் தேர்தல் மூலம் மக்களால் தேர்வு செய்யப்பட்ட 115 மக்கள் பிரதிநிதிகளைக் கொண்டதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கமானது பாராளுமன்றம், அமைச்சரவை, மேற்சபை, நெறிமுறை ஆணையம், தேர்தல் ஆணையம், மதியூரைக்குழு என்ற அலகுகளைக் கொண்டு இயங்குகின்றது.

இந்நிலையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது பாராளுமன்ற மூன்றாண்டு பணிக்காலம் எதிர்வரும் ஒக்ரோபர் மாதத்துடன் நிறைவு செய்கின்ற நிலையில், மக்களுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிக்கமைய ஒக்ரோபர் 1ம் திகதியுடன் பாராளுமன்றத்தினை கலைத்துக் கொள்வதாக பிரதமர் வி.உருத்திருமாரன் அவர்கள் அறிவித்துள்ளார்.

கடந்த 03-08-2013ம் நாள் இடம்பெற்றிருந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பாராளுமன்ற கூட்டத்திலேயே இந்த அறிவிப்பினை பிரதமர் வி.உருத்திருமாரன் அவர்கள் வெளியிட்டிருந்தார்.

எதிர்வரும் ஒக்ரோபர் 1ம் திகதியுடன் பாராளுமன்றம் கலைக்கப்பட்டாலும், தொடர்ந்து தேர்தல்மூலம் வருகின்ற அடுத்த பாராளுமன்ற பணித் தொடங்கும் வரை, தற்போதுள்ள  அமைச்சரவை நடைமுறையில் இருக்கும் எனவும் பிரதமர் வி.உருத்திருமாரன் அவர்கள் தெரிவித்தார்.

பராளுமன்றத்தில் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களினால் இந்த அறிவித்தல் உத்தியோகபூர்வமாக விடுக்கப்பட்டுள்ள நிலையில், புலம்பெயர் தேசங்களெங்கும்  தேர்தலுக்கான பணிகளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான தேர்தல் ஆணையம் முடுக்கிவிட்டுள்ளமை இங்கு குறிப்பிடதக்கது.

0 Responses to நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது பாராளுமன்ற பணிக்காலம் வரும் ஒக்ரோபருடன் நிறைவு: பிரதமர் வி.உருத்திரகுமாரன்

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com