Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

காஷ்மீர் எல்லைப் பகுதியில் கடந்த இரு நாட்களுக்கு முன்னர் இந்திய துருப்புக்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சர்ச்சையில் பாகிஸ்தான் இராணுவத்தினருக்கு தொடர்பிருப்பதை தற்போது பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோனி நாடாளுமன்றத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.

முன்னதாக, பாகிஸ்தான் இராணுவ சீருடையில் வந்த தீவிரவாதிகளே இத்தாக்குதலை மேற்கொண்டிருப்பதாக அந்தோனி கூறியதால், பாகிஸ்தான் இராணுவத்தினர் தப்பித்துக்கொள்ள அந்தோனியே பாதை அமைத்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இந்நிலையில் தனது முன்னைய கருத்தை வாபஸ் வாங்கியுள்ள அந்தோனி, இன்று நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் உரையாற்றுகியில், 'குறித்த தாக்குதலுடன் பாகிஸ்தான் இராணுவத்திற்கு தொடர்பிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுடைய ஆதரவு, வசதிகள், வழிநடத்தல் இல்லாமல் காஷ்மீர் எல்லைப் பகுதியில் எதுவுமே நடைபெற்றிருக்க வாய்ப்பு இல்லை. ஆயுத தாரிகளுக்கு பாகிஸ்தான் இராணுவம் நேரடியாக உதவி செய்து வருவது பல தடவை நிரூபிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்திய இராணுவ வீரர்கள் ஐந்து பேர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கும் பாகிஸ்தான் இராணுவமே பொறுப்புக் கூறவேண்டும் என அவர் கூறினார்.

இதேவேளை பாஜக தலைவர் சுஷ்மா ஸ்வராஜ், அந்தோனியின் இக்கருத்தை வரவேற்றுள்ளார். தனது முன்னைய தவறான செய்தியை அந்தோனி திருத்திக்கொண்டதற்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

0 Responses to காஷ்மீர் தாக்குதலுக் கு பாகிஸ்தான் இராணுவமே பொறுப்பு : ஏ.கே.அந்தோனி தற்போது தெரிவிப்பு

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com