தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வடமாகாணசபை தேர்தல் வேட்பாளர் தம்பிராசா
மற்றும் காரைநகர் பிரதேச சபை தலைவர் ஆனைமுகன் ஆகிய இருவரும் இன்று
பட்டப்பகலில் பொது மக்கள் முன்னிலையினில் யாழ்.நகரப்பகுதியினில் வைத்து
தாக்கப்பட்டுள்ளனர்.அவர்கள் பயணித்த வாகனமும் அடித்து நொருக்கப்பட்டுள்ளது.
இத்தாக்குதலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு சார்பினில் வடக்கு தேர்தல்
களத்தினில் குதித்துள்ள தம்பிராசா காயமடைந்துள்ளார்.
ஜக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு வேட்பாளரும் சுதந்திரக்கட்சியின்
யாழ்.மாவட்ட அமைப்பாளருமான அங்கயனின் தந்தையாரான இராமநாதனின் வழி
நடத்தலிலேயே இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக காரைநகர் பிரதேச சபை தலைவர்
ஆனைமுகன் பத்திரிகையாளர்களிடையே தெரிவித்தார்.குறிப்பாக யாழ்.மத்திய
பேருந்து நிலையம் முன்பதாக இத்தாக்குதல் சம்பவம் நடந்துள்ளமை பலத்த
அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.எனினும் பொதுமக்கள் திரண்டதையடுத்து
தாக்குதலாளிகள் தப்பி ஓடியுள்ளனர்.
முன்னதாக காரைநகரினில் தமது பிரச்சார நடவடிக்கைகளிற்கு ஆளும் தரப்பும் பொலிஸாரும் விடுத்து வரும் மிரட்டல்கள் தொடர்பாக யாழ். ஊடக அமையத்தினில் பத்திரிகையாளர் சந்திப்பொன்றை அவர்கள் நடத்தியிருந்தனர்.பின்னர் நகரப்பகுதியூடாக திரும்பிக்கொண்டிருந்த வேளையினிலேயே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே நெடுந்தீவினில் கூட்டமைப்பு ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருந்த நிலையினில் இரண்டாவது தாக்குதல் சம்பவமாக இது பார்க்கப்படுகின்றது.

0 Responses to யாழ்.நகரப்பகுதியினில் கூட்டமைப்பு மீது தாக்குதல்! யாழ்.மாவட்ட சுதந்திரக்கட்சி அமைப்பாளர் அங்கயன் குழு மீது குற்றச்சாட்டு!!