Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அவுஸ்திரேலியா நோக்கிய ஆபத்து நிறைந்த சட்டவிரோத கடற்பயணங்களை மேற்கொள்வதை தவிர்த்துக் கொள்ளுமாறு பொது மக்களிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேண்டிக் கொண்டுள்ளது.

உயிர்களை பணயம் வைத்து அவுஸ்திரேலியா நோக்கி மேற்கொள்ளப்படுகின்ற கடற்பயணங்களின் மூலம் அங்கு சென்றடைந்தாலும், அந்நாட்டு அரசு சட்டவிரோத அகதி கோரிக்கையாளர்களை உங்வாங்குவதில்லை என்று அறிவித்துள்ளது. எதிர்காலத்தில் கடற்பயணங்களினூடு அவுஸ்திரேலியா சென்றாலும் அகதிக்கோரிக்கையாளர்கள் திருப்பி அனுப்பப்படுவதற்கான வாய்ப்புக்களே உள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அப்படியிருக்க சட்டத்துக்கு புறம்பான முறையில் ஆபத்தான கடற்பயணங்களை மேற்கொள்வது அச்சுறுத்தலானது. எனவே, அவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்றும் கோரியுள்ளது.

 கடத்தல்காரர்கள் மற்றும் இடைத்தரகர்களிடம் இலட்சக்கணக்கில் பயணத்தைக் கொடுத்து எப்படியாவது அவுஸ்திரேலியா சென்றுவிடலாம் என்று முயற்சிப்பது ஆபத்தானது. அவ்வாறான பணங்களின் மூலம் பெரிய நன்மைகள் எதுவும் விளைந்துவிடாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், ஊடகப்பேச்சாளருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். எனவே, அவுஸ்திரேலியா கூட்டிச்செல்வதாக வருகின்ற இடைத்தரகர்களிடம் நம்பிக்கை கொள்ள வேண்டாம் என்றும் வடக்கு- கிழக்கிலுள்ள மக்களை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

0 Responses to ஆஸிக்கான சட்டவிரோத கடற்பயணங்களைத் தவிருங்கள்: கூட்டமைப்பு கோரிக்கை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com