கம்பஹாவின் வெலிவேரிய பகுதியில் கடந்த வியாழக்கிழமை இராணுவத்தினரால்
மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை மூன்றாக
அதிகரித்துள்ளது.
படுகாயமடைந்திருந்த 19 வயதுடைய மற்றொரு இளைஞர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நேற்று சனிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமை காலை மூன்றாவதாக ஒருவரும் சிகிச்சைகள் பலனின்றி உயிரிழந்துள்ளார்.
வெலிவேரிய வன்முறைகளில் கல்வி நிலையமொன்றிலிருந்து திரும்பிக்கொண்டிருந்த 17 வயதுடைய மாணவரொருவர் இராணுவத்தினரின் துப்பாக்கி பிரயோகத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த நிலையிலேயே வெலிவேரிய வன்முறைகளின் உயிரிழப்புக்களின் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது.
குடிதண்ணீருக்கான தமது உரிமைகளை வலியுறுத்தி வெலிவேரிய பகுதி மக்கள் கடந்த வியாழக்கிழமை ஆர்ப்பாட்ட போராட்டத்தை நடத்தியிருந்தனர். அந்த போராட்டத்தை ஆயுத முனைவில் இராணுவத்தினர் அடக்க முற்பட்டனர். அதன்போது, இராணுவத்தினரின் துப்பாக்கி பிரயோகத்தில் சம்பவ இடத்தில் மாணவர் ஒருவர் கொல்லப்பட்டதுடன், 20க்கும் அதிகமானோர் படுகாயமடைந்திருந்தனர். இந்த நிலையிலேயே படுகாயமடைந்திருந்த மேலும் இருவர் நேற்றும், இன்னும் உயிரிழந்துள்ளனர்.

0 Responses to இலங்கையின் வெலிவேரிய வன்முறைகள்: உயிரிழந்தோர் எண்ணிக்கை மூன்றாக உயர்வு