Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நெடுந்தீவில் வடமாகாண சபைத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மீது ஈ.பி.டி.பி குண்டர்கள் மேற்கொண்ட தாக்குதலில் பெண்ணொருவர் உட்பட மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
இந்த தாக்குதல் சம்பவமானது நேற்றிரவு 9 மணியளவில் நெடுந்தீவு மேற்கிலுள்ள ஒற்றைப்பனையடியில் இடம்பெற்றுள்ளது.நெடுந்தீவில் மிக அண்மையில் கூட்டமைப்பின் கிளை அலுவலகம் ஒன்று திறக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து மாகாண சபை பிரசாரப் பணிகளை கூட்டமைப்பினர் மேற்கொண்டு வந்தனர்.

ஈ.பி.டி.பி யின் பிரதேச சபை தவிசாளர் ரஜீப் தலைமையில் பிரதேச சபை வாகனத்தில் ஈ.பி.டி.பி உறுப்பினர்களான சுதன், மோகனதாஸ், எட்வேட்ராஜா ரஞ்சன், வாகனச் சாரதி அப்பன் ஆகியோரும் பிரதேச சபைக்கு சொந்தமான மேலும் பல வாகனங்களில் மேலும் பல குண்டர்களும் சென்று இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

வீடொன்றிற்குள்ளாக சென்ற இவர்கள் வீட்டினை உடைத்து இரும்புக் கம்பிகளாலும் கொட்டன்களாலும் தாக்கியதோடு, வீட்டிலிருந்த பெண்ணொருவரையும் முற்றத்தில் இழுத்துப் போட்டு அடித்துள்ளனர்.

இச்சம்பவத்தில் நெடுந்தீவில் திருமணம் செய்து வசித்து வரும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவரும் கூட்டமைப்பின் ஆதரவாளருமான ரணசிங்க ஆரியசேன (வயது 40), சைமன் யேசுதாஸன், யேசுதாஸன் அன்ரனிற்றா ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் நெடுந்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் தவிர மேலும் சில காயமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை கூட்டமைப்பின் வேட்பாளர்களது துண்டுப் பிரசுரங்களையும் இவர்கள் மலக் குழிகளுக்குள்ளாக போட்டுள்ளனர்.இந்த சம்பவத்தைத் தொடர்ந்து நெடுந்தீவில் கடும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

0 Responses to நெடுந்தீவில் கூட்டமைப்பினரின் வீடுகளுக்குள்ளே ஈ.பி.டி.பி குண்டர்கள் புகுந்து அட்டகாசம்: பெண் உட்பட மூவர் படுகாயம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com