மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை இலங்கை வரவுள்ள நிலையில், இந்த
மாதம் இலங்கைக்கு தலைவலியான மாதமாக அமையும் என்று, முப்படைத் தளபதி ஜகத்
ஜெயசூரிய தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர்
நவநீதம் பிள்ளையின் இந்த மாதம் 25ம் திகதி அளவில் இலங்கைக்கு வரவிருப்பதாக
தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், இலங்கை இராணுவத்தினர் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பில் அவருக்கு பதில் வழங்க இராணுவம் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் நவநீதம் பிள்ளை விரும்பும் இடங்களுக்கு அழைத்துச் செல்லவும், அவருக்கான பாதுகாப்பினை வழங்கவும் உரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் ஜெகம் ஜெயசூரிய குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to நவநீதம்பிள்ளை விஜயம் தலையிடியே - முப்படைத் தளபதி ஜகத் ஜெயசூரிய!