பாமகவினருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று, நீதிமன்றத்தில் ஜிகே
மணி தொடர்ந்து இருந்த வழக்கின் மீதான விசாரணையில், தமிழக அரசு இன்று
விளக்கம் அளித்துள்ளது.
பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்பு மணி ராமதாஸ் இருவருக்கும் போலீஸ் பாதுகாப்பு மீண்டும் வழங்க வேண்டும் என்று, சென்னை உயர் நீதிமன்றத்தில், பாமகவை சேர்ந்த ஜிகே மணி மனு தொடுத்து இருந்தார். இந்த மனுவின் மீதான விசாரணை இன்று வந்தபோது,
ராமதாஸுக்கு தற்போது எந்தவித அச்சுறுத்தலும் இல்லை. அவரது உயிருக்கு ஆபத்தான சூழலும் இப்போது இல்லை. எனவே, அவருக்கு அளிக்கப்பட்டு இருந்த பாதுகாப்பை தமிழக அரசு திரும்ப பெற்றுக் கொண்டது. அவரது உயிருக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என்பதால், அவருக்கு தமிழக அரசு சார்பில் போலீஸ் பாதுகாப்பு அளிக்க முடியாது.
அதே போன்று அன்புமணி ராமதாஸ் இப்போது மத்திய அமைச்சராக இல்லை என்பதாலும் அவருக்கும் தமிழக அரசு சார்பாக போலீஸ் பாதுகாப்பு அளிக்க முடியாது என்று, நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

0 Responses to ராமதாஸுக்கு பாதுகாப்பை நிறுத்தியது ஏன்? நீதிமன்றத்தில் தமிழக அரசு இன்று விளக்கம்!