கம்பஹாவின் வெலிவேரிய பகுதி மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு துப்பாக்கி
குண்டுகளின் மூலம் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் தீர்ப்பு எழுதியுள்ளதாக
குற்றஞ்சாட்டியுள்ள ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விரோத செயற்பாடுகளிலேயே
அரசாங்கம் தொடர்ந்தும் ஈடுபடுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.
குடிநீர் உரிமைகளுக்காக போராடிய வெலிவேரிய மக்களை இராணுவம் துப்பாக்கி பிரயோகம் செய்து கலைத்தமை மற்றும் இராணுவத்தினரின் துப்பாக்கி பிரயோகத்தில் மூன்று பேர் உயிரிழந்தமை தொடர்பில் கொழும்பில் இன்று திங்கட்கிழமை ஊடகவியலாளர் மாநாட்டை நடத்தி கருத்து தெரிவிக்கும் போதே ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும், ஊடக பேச்சாளருமான கயந்த கருணாதிலக மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மாவிலாறு குடிநீர் பிரச்சினைகளின் மூலம் விடுதலைப் புலிகளுக்கு எதிரான மோதல்களை மேற்கொண்ட அரசாங்கத்தின் செயற்பாடுகளை ஊக்குவித்த ஜாதிக ஹெல உறுமய போன்ற கட்சிகள் வெலிவேரிய மக்களின் உரிமைகள் தொடர்பில் எந்தவித அக்கறையையும் கொள்ளாமல் கள்ள மௌனம் சாதிப்பதாக தெரிவித்த அவர், களவு, பொய் என்று மக்கள் விரோத செயற்பாடுகளில் ஈடுபடும் அரசாங்கம் மக்களினால் தோற்கடிக்கப்படும் காலம் நெருங்கியுள்ளதாக கூறினார்.
வெலிவேரி மக்களின் உரிமைகளை மதிக்காது அவர்களின் போராட்டத்தை துப்பாக்கி முன்வைகளில் அடக்கிய அராங்கத்தின் செயற்பாடுகளை ஐக்கிய தேசியக் கட்சி வன்மையாகக் கண்டிப்பதாகவும் கயந்த கருணாதிலக மேலும் தெரிவித்துள்ளார்.

0 Responses to வெலிவேரிய மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு அரசு துப்பாக்கியினால் தீர்ப்பு எழுதியுள்ளது: ஐ.தே.க