மும்பையில் பாலியல் தொழிலாளிகள்
வசித்து வரும் காமாத்திபுரா சிவப்பு விளக்குப் பகுதியில் பிறந்து வளர்ந்து
படிப்பில் மாத்திரம் அதிக கவனம் செலுத்தியதன் மூலம் அமெரிக்காவுக்கு
மேற்படிப்புக்காக செல்லக்கூடிய வாய்ப்பை பெற்றிருக்கும் ஸ்வேதா கட்டி (18)
எனும் இளம்பெண் ஊடகங்களில் பிரபலமாகியுள்ளார்.
தாழ்ந்த சாதி, வறுமை நிலை காரணமாக தான் படித்த பள்ளியில் கூட பாரபட்சமாக நடத்தப்பட்டபோதும், தனது படிப்பிலிருந்து கவனத்தை தவறவிடவில்லை ஸ்வேதா.
இதனால், அந்தப் பகுதியில் பெண்களின் சமூக மாற்றத்திற்காக செயற்பட்டு வரும் தொண்டு நிறுவனமான கிரந்தி, அவருக்கு கல்வியில் உதவ முன்வந்தது. அக்கல்வி நிறுவனத்தின் உதவியில் தனது ஆங்கில மொழித் திறமையையும், தனது விருப்ப பாடமான மனோதத்துவ துறைக்கான அறிவையும் விருத்தி செய்து கொண்ட ஸ்வேதா, அமெரிக்காவில் மேற்படிப்புக்கான வாய்ப்பை பெற்றார், அமெரிக்கவின் ஃபார்ட் கல்லூரி அவருக்கு இந்த வாய்ப்பை வழங்கியது. கடந்த வியாழக்கிழமை அவர் அமெரிக்காவுக்கு புறப்ப்ட்டுச் சென்றார்.
தான் வாழ்ந்த பகுதியில் வாழ்ந்த பெண்கள் சிறுமைப்பட்டுக்கொண்டுமப்பதையும், கேவலமாக நடத்தப்படுவதையும் சிறுவயதிலிருந்தே அவதானித்து வந்த ஸ்வேதா, அது போன்ற நிலைமை தனக்கும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடாது என்பதில் உறுதியாக இருந்துள்ளார். எனினும் இவரது தந்தை உட்பட பல்வேறு நபர்களால் பாலியல் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளார்.
எனினும் மும்பையில் ஒரு தொழிற்சாலையில் பணியாற்றி வந்த இவரது தாயார் மாத்திரமே தொடர்ந்து ஸ்வேதாவின் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருந்துள்ளார். இவர் கடந்த வியாழக்கிழமை அமெரிக்காவுக்கு விமானம் ஏறுவதற்கு முன்னர், கருத்து தெரிவிக்கையில், 'படிப்பு முடித்து இந்தியா திரும்பிய பின், சமூகத்தில் குறிப்பாக சிவப்பு விளக்குப் பகுதியில் பாதிக்கப்பட்டுள்ள இளம்பெண்களுக்கு உதவுவதே தனது நோக்கம் என தெரிவித்துள்ளர்.

0 Responses to மும்பை சிவப்பு விளக்குப் பகுதியிலிருந்து அமெரிக்காவில் மேற்படிப்பு வாய்ப்புக்காக புறப்பட்ட பெண்!