Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சிரியாவில் சுமார் 100 000 இற்கும் அதிகமான மக்களைப் பலி கொண்டு கடந்த இரு வருடங்களுக்கும் மேலாக இடம்பெற்று வரும் மக்கள் யுத்தம் யுத்தக் களத்தின் தான் முடிவுறும் என சமீபத்தில் சிரிய அதிபர் அசாத் அதிரடியாக அறிவித்து சர்ச்சையைக் கிளப்பியுள்ளார்.

சிரியாவின் உத்தியோகபூர்வ ஊடகமான சானாவிற்கு அதிபர் அசாத் நேற்று ஞாயிற்றுக் கிழமை பேட்டியளித்த போதே இவ்வாறு கூறியுள்ளார்.

அசாத் விரிவாகக் கூறுகையில், 'சிரிய பிரச்சினையைத் தீர்ப்பதற்குச் சாத்தியமான அனைத்து வழிகளிலும் எல்லா தரப்பினரும் முயன்று பார்த்து விட்டனர். இவை அனைத்தும் தோல்வியிலேயே முடிவடைந்ததுடன் ஒரேயொரு வழி மட்டுமே எஞ்சியுள்ளது. அது என்னவெனில் எம்மையும் எமது நாட்டையும் காப்பதற்கு நமது சொந்தக் கையாலேயே முயல்வது ஆகும். இவ்விவகாரத்தில் அனைவருமே இயறகையாக ஆயுதம் தாங்கிய படைகளாகவே உள்ளனர். எனவே இப்பிரச்சினை யுத்தக் களத்தில் மட்டுமே நிறைவுற முடியும்!'
அசாத்தின் அரசு தனது எதிரணியினரை இஸ்லாமிய கிளர்ச்சிப் படையினரால் வழிநடத்தப் படுவதாகக் கருதி இரு தரப்பையுமே தீவிரவாதிகளாக அறிவித்துப் போராடி வரும் அதேவேளை கிளர்ச்சிப் படையினர் தமது நாட்டிலுள்ள ஒரு சர்வாதிகாரியைப் பதவியிறக்கி நாட்டை விட்டு வெளியேற்றவே போராடுகின்றோம் எனத் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சிரிய மக்கள் யுத்தம் 2011 மார்ச்சில் சமாதான அடிப்படையிலான ஆர்ப்பாட்டங்களாகவே ஆரம்பித்தது. ஆனால் அது மோசமடைந்து மக்கள் யுத்தமானதால் சிரியப் பொருளாதாரமும் பெருமளவு வீழ்ச்சியடைந்து வருகின்றது. இந்த யுத்தத்தில் எதிரணி மற்றும் அசாத் தரப்பு இரண்டுமே ஒருவரை இன்னொருவர் குற்றஞ் சாட்டி வருவதுடன் பொது மக்களைக் கேடயமாக்கி இரசாயன ஆயுதங்களையும் பாவித்து வருகின்றன. கிளர்ச்சிப் படைக்கு ஆதரவளிக்கும் அமெரிக்காவும், அசாத்துக்கு உதவி வரும் ரஷ்யாவும் இந்த இரு தரப்பையும் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு அழைத்து வருவதில் இதுவரை தவறி விட்டன.

இந்த அரசியல் சதுரங்கத்தில் வெறும் அப்பாவி மக்கள் பெருமளவில் பலியாகி வருவதும் இன்னும் லட்சக்கணக்கானோர் தமது வதிவிடங்களை விட்டு வெளியேறி அகதிகளாகி வருவதும் தான் வேதனைக்குரிய விடயமாகும்.
மேலும் இந்த யுத்தம் சிரியா மீது சர்வதேசத்தின் பொருளாதாரத் தடைகளை கொண்டு வந்ததுடன் அந்நாட்டின் நாணயப் பெறுமதியையும் மிகவும் வீழ்ச்சியடைய வைத்துள்ளது.

0 Responses to சிரிய பிரச்சினை யுத்தக் களத்திலேயே தீர்க்கப் படும்:அதிபர் பஷார் அல் அசாத்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com