தீவிரவாதமும், பேச்சுவார்த்தையும் ஒரே பாதையில் பயணிக்க முடியாது என்று,
எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல் குறித்த ஒரு கருத்துக்கு பதில்
கூறுகையில், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்
கூறியுள்ளார்.
நாடாளுமன்றக் கூட்டத் தொடரின் போது, மக்களவையில் பாஜக, எல்லையில் பாகிஸ்தானின் அத்துமீறல் குறித்து கேள்வி எழுப்பியது. அப்போது, இந்தியா, பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும், பாகிஸ்தானின் அத்துமீறல் குறித்து, கண்டனத் தீர்மானம் நிறைவேற்றியது குறித்தும், கேள்வி எழுப்பிய பாஜக,
பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்துவது என்பது எல்லையில் பாகிஸ்தானின் தொடர் அத்துமீறலுக்கு தீர்வாக இருக்க முடியாது என்று திட்டவட்டமாக கருத்து தெரிவித்தது. அதோடு, பாகிஸ்தானோடு, இந்தியா இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தக் கூடாது என்று வலியுறுத்தியது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், இந்த விஷயத்தில் பாஜகவின் கருத்தை ஏற்றுக் கொள்வதாக் கூறியுள்ளார். அதோடு, பாகிஸ்தானுடன் இனி பேச்சுவார்த்தை நடத்துவது என்பது இனி சரியாக இருக்காது என்றும் கூறியுள்ளார்.
மேலும், தீவிரவாதமும், பேச்சுவார்த்தையும் ஒரே பாதையில் பயணம் செய்ய முடியாது என்பதுதான் நிஜம் என்றும் கூறியுள்ளார்.

0 Responses to தீவிரவாதமும், பேச்சுவார்த்தையும் ஒரே பாதையில் பயணிக்க முடியாது : சல்மான் குர்ஷித்