Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தர்மபுரியில் காதல் கலப்பு திருமணம் செய்து கொண்ட இளவரசன் கடந்த மாதம் ரெயில் தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டார் என்று அவரது உறவினர்கள் புகார் செய்தனர்.  இளவரசன் மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று அவரது பெற்றோர் வைத்த கோரிக்கையை ஏற்று தமிழக அரசு இதுகுறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி சிங்காரவேலு தலைமையில் ஒருநபர் விசாரணை கமிஷனை நியமித்தது.

இதையடுத்து அவர், இளவரசன் மரணம் குறித்து தகவல் தெரிந்தவர்கள் மனுவாக கொடுக்கலாம் என்று அறிவித்தார். அதன்படி சென்னையில் உள்ள அவரது அலுவலகத்துக்கு பலர் மனுக்கள் அனுப்பியதாக தெரிகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அஸ்ராகர்க் இளவரசன் கொலை செய்யப்படவில்லை என்று ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்தார்.

இந்நிலையில் நீதிபதி சிங்காரவேலுவின் விசாரணை வியாழக்கிழமை முதல் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்காக தர்மபுரி சுற்றுலா மாளிகையின் தரை தளத்தில் நீதிமன்றம் போல் டேபிள், சேர் போடப்பட்டு இருந்தது.

அதன்படி காலை 11 மணிக்கு விசாரணை தொடங்கியது. நீதிபதி சிங்காரவேலு இளவரசன் மரணம் குறித்து விசாரணை மேற்கொண்டார். சம்பவ இடத்திற்கு சென்று மாவட்ட ஆட்சியர் விவேகனந்தன் மற்றும் மாவட்ட எஸ்.பி அஸ்ராகர்கிடம் விவரம் கேட்டு அறிந்தார். இதையடுத்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

செய்தி, படங்கள்: எம்.வடிவேல்

0 Responses to இளவரசன் மரணம் குறித்து நீதிபதி சிங்காரவேலு விசாரணை!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com