Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தந்தை செல்வாவின் பாசறையில் ‘களமாடிக்’ களைத்த ‘பழுத்த’ அரசியல்வாதி.

தளபதி அமிர்தலிங்கத்தின் உழுத்துப்போன உடைவாளை சுமந்துநிற்கும் ‘மதிவியூகி’.

கொழும்பில் கடைவிரித்து டில்லிக்கும், வோசிங்கடனுக்கும் அடிக்கடி படையெடுத்து மேனனுடனும், ஓ பிளேக்குடனும் கண்ணாடிக் குவளையில் திராட்சை மதுரசம் அருந்தும் அரசியல் சாணக்கியன்.

தம்பி செய்த தவறை ‘திருத்த’ பொன்சேகாவுடன் கூட்டுச் சேர்ந்து மண்கவ்விய ‘மாமேதை’.

வடக்கில் இருந்து கிழக்கு துண்டாடப்பட்டால் என்ன? கிழக்கிலிருந்து வடக்கு துண்டாடப்பட்டால் என்ன? தேர்தலில் குதித்து தமிழ் மக்களை மீட்கும் ஆற்றல் மிக்க மாபெரும் ‘தலைவன்’.

இராஜவரோதயர் ஈன்றெடுத்த தவப்புதல்வன்.

காளிதேவியின் வாகனமாகிய சிங்கத்தை தனது கொடியில் சிங்களம் பொறித்து நிற்பதால் அதனை உவகையுடன் கையில் ஆட்டி அசைத்து ஆனந்தக்கூத்தாடும் அறிவுக்கடல்.

தமிழ்த் தேசியக் கூத்தமைப்பின் (கூட்டமைப்பு அல்ல) தலைவர் சம்பந்தர் இன்று கனடா ஏகி புலம்பெயர் தமிழர்களுடன் இராப்போசன விருந்துண்கின்றார்.

‘பெருந்தலைவர்’ சம்பந்தருடன் இணைந்து மதுபான ஆற்றில் நீந்தித் திளைத்து தமிழீழத்தை மறப்பதற்கு அனைவரும் திரண்டு வாரீர்.

நுழைவுக் கட்டணம் வெறும் நூறு டொலர்கள் மட்டுமே.

‘குடிப்பதற்கோர் மனமிருந்தால் தமிழீழத்தை மறந்து விடலாம். தமிழீழத்தை மறப்பதற்கோர் மனமிருந்தால் சம்பந்தருடன் மது ஆற்றில் நீந்தித் திளைத்துவிடலாம்.

பின்குறிப்பு: கிளிநொச்சியை நிர்வாகத் தலைநகராகக் கொண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயங்கிய காலப்பகுதியில் ஒரு தடவை டென்மார்க்கிற்கு வருகை தந்த இரா.சம்பந்தர், உணவருந்தி விட்டு உறங்கச் செல்லும் பொழுது பெரும் தயக்கத்துடன் அங்கு நின்ற தமிழீழ தேசிய செயற்பாட்டாளர்களிடம் ஒரு வேண்டுகையை விடுத்தார்: ‘‘தம்பியவை குறை நினைக்கக்கூடாது. எனக்கு சின்ன வயசில் இருந்தே விஸ்கி அடிச்சால்தான் நித்திரை வரும். இஞ்சை ஏதாவது விஸ்கி கிடைக்குமோ?’’ என்று மன்றாட்டமாகக் கேட்டாராம்.

0 Responses to குடிப்பதற்கோர் மனமிருந்தால் தமிழீழத்தை மறந்துவிடலாம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com