இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விடுவிக்குமாறு
இந்தியா விடுத்திருந்த கோரிக்கையை இலங்கை நிராகரித்துள்ளது. கடந்த சில
தினங்களுக்கு முன்னர் இந்தியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர்
பிரசாத்காரியவசம்.
இந்திய வெளிவிவகார அமைச்சுக்கு அழைக்கப்பட்டு, மீனவர்களின் கைது தொடர்பில் இந்தியா ராஜதந்திர அதிருப்தியை வெளியிட்டிருந்தது. இதன்போது இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 114 மீனவர்களை விடுவிக்குமாறு கோரி இருந்தது.
எனினும் இந்த கோரிக்கையை ஏற்க முடியாது என்று, இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக அமுனுகம தெரிவித்துள்ளார். இலங்கையில் சட்டத்திட்டங்கள் உள்ளன. கைதானவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, நீதி செயற்பாடுகளின் அடிப்படைலேயே அவர்களின் விடுதலை தொடர்பில் தீர்மானிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to இந்திய மீனவர் விடுதலை சாத்தியமில்லை! இந்தியாவின் கோரிக்கையை நிராகரித்தது இலங்கை!!