Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மன்னாரில் யுவதி ஒருவரை காணவில்லை!

பதிந்தவர்: தம்பியன் 10 August 2013

மன்னார் விடத்தல் தீவைச் சேர்ந்த யுவதி ஒருவரை நேற்று முன்தினம் வியாழக்கிழமை மதியம் முதல் காணவில்லை என அவரது பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளார்.

மன்னார் விடத்தல் தீவைச்சேர்ந்த ஏ.சுகன்னியா (வயது-17) என்ற யுவதியே காணாமல் பேயுள்ளார். குறித்த யுவதி தனது உறவினர்களுடன் யாழ்ப்பாணத்தில் வசித்து வந்த நிலையில், மன்னார் விடத்தல் தீவில் உள்ள தனது பெற்றோரிடம் வருவதற்காக நேற்று முந்தினம் புதன் கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள தனது உறவினர் ஒருவரோடு குறித்த யுவதி மன்னார் வருகை தந்துள்ளார்.

மன்னார் அரச பேரூந்து தரிப்பிடத்தில் மதியல் 1 மணியளவில் நின்ற போது அழைத்து வந்த உறவினர் கடைக்குச் சென்று விட்டு மீண்டும் அந்த யுவதி நின்ற இடத்திற்கு சென்ற போது யுவதியும், அவர் வைத்திருந்த உடுப்பு பையுடன் காணமல் போயுள்ளார்.

அவரை தேடியும் எங்கும் இல்லாத நிலையில் அவருடைய பெற்றோர் மற்றும் உறவினர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.

குறித்த யுவதியும், அவருடய பெற்றோர்களும் இந்தியாவில் வசித்து வந்த நிலையில் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு மீண்டும் இலங்கை வந்து விடத்தல் தீவில் வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to மன்னாரில் யுவதி ஒருவரை காணவில்லை!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com