Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

யாழ்.நாவற்குழிப் பகுதியில் அத்துமீறி குடியேறியிருக்கும் சிங்கள மக்களுடைய புத்தவிகாரை மீது இன்று 11 ஆம் திகதி சனிக்கிழமை இரவு 8 மணியளவில் கைக்குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

காரில் வந்த இனந்தெரியாத நபர்கள் இத்தாக்குதலை மேற்கொண்டு விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து அங்கு பெரும் தொகையான சிறிலங்கா இராணுவம் மற்றும் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவது.
யுத்தத்திற்குப் பின்னர் கடந்த 2010 ஆம் ஆண்டு காலப்பகுதியில் யாழ்.ரயில் நிலையத்தில் வந்திருந்த ஒரு தொகுதி சிங்கள மக்கள் தாம் யாழ்.மாவட்டத்தினைச் சேர்ந்தவர்கள் என்று கூறி அங்கு அடாத்தாக நிலைகொண்டிருந்தனர்.

இதன் பின்னர் அரசியல் பின்புலத்தினால் அங்கிருந்த சிங்கள மக்கள் நாவற்குழிப் பகுதியில் குடியேற்றம் செய்யப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் அங்கு குடியேறிய சிங்கள மக்களுக்கு சிறிலங்கா இராணுவத்தின் உதவியுடன் பொது நோக்கு மண்டபம் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. குறித்த மண்டபத்தில் அங்குள்ள சிங்கள மக்கள் புத்தருடைய சிலையினை வைத்து தமது வணக்கஸ்தலமாக அதனைப் பராமரித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் இன்று சனிக்கிழமை இரவு 8 மணியளவில் அப்பகுதியில் வெள்ளை நிற கார் ஒன்று வந்துள்ளது. இதன் பின்னர் குறித்த மண்டபத்தின் மீது கல்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது போன்ற சத்தம் கேட்டுள்ளது. இதன் பின்னர் அங்குவந்த கார் திரும்பிச் சென்றுவிட்டது.

இச் சத்தத்தினைத் தொடர்ந்து பாரிய வெளிச்சத்தோடு வெடிப்பு சத்தமும் கேட்டுள்ளது. இதனையடுத்து அங்கு வந்து பார்த்த பொது மக்கள் குண்டுத்தாக்குதல் நடாத்தப்பட்டிருப்பதை அவதானித்துள்ளனர். இதன் போது அப்பகுதியில் மக்கள் ஒன்று கூடுவதை அடுத்து குறித்த மண்டபத்திற்கு அருகில் இருந்து குடிசை ஒன்றினுள் மறைந்திருந்த நபர் ஓடி மறைந்துள்ளார் என்றும் சம்பவ இடத்தில் இருந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.

0 Responses to யாழ்.நாவற்குழியில் அத்துமீறி குடியேறிய புத்தவிகாரை மீது கைக்குண்டுத்தாக்குதல்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com