வடக்கு மாகாணத்தில் இராணுவத்தின் பிரசன்னம் இடம்பெற இனிமேல் அனுமதிக்க முடியாது.
இராணுவத்தினர் முகாம்களுக்குள் முடக்கப்பட வேண்டும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு என்ற பெயரில் மக்களுக்கு இடையூறு வழங்கும் விதமாக வடக்கில் தங்கியிருக்கும் இராணுவத்தினரை வெளியேற்றுவது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மத்திய அரசாங்கத்துடன் தொடர்ந்து பேச்சுக்களை நடத்தி தீர்வினைப் பெற்றுக்கொள்ள முனையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாண சபை கட்டிடத்தில் இன்று வெள்ளிக்கிழமை வடக்கு மாகாண சபையின் கன்னி அமர்வு இடம்பெற்றது. அதன்போது அவையில் உரையாற்றி முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
வடக்கு மாகாணத்தின் ஆளுநராக முன்னாள் இராணுவ அதிகாரியொருவர் கடமையாற்றுவதை விரும்பவில்லை. எனவே, சிவில் சமூகத்தை பிரதிநிதிதுவப்படுத்தும் நபர் ஒருவர் ஆளுநராக நியமிக்கப்பட வேண்டும். இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கவனத்துக்கு கொண்டு வரவுள்ளோம் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மோதல்களினால் பாதிக்கப்பட்டுள்ள வடக்கில், வடக்கு மாகாண சபை ஆளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், மத்திய அரசாங்கமும் இணைந்து அபிவிருத்தியின் பாதையில் கொண்டு செல்ல வேண்டிய தேவையும், அவசியமும் உள்ளது. அதுபோல, வடக்கு மக்களின் பொருளாதார அபிவிருத்தியின் வெளிநாடுகளிலிருக்கும் தமிழ் சமூகம் அக்கறை கொண்டு செயற்பட வேண்டும் என்றார்.
இதனிடையே, அரசியலமைப்பின் 13வது திருத்த சட்டத்தில் நிறைய குறைபாடுகள் உள்ளதை சுட்டிக்காட்டிய முதலமைச்சர், ஆனாலும், வடக்கு மாகாண சபைத் தேர்தலில் அந்த சட்ட வரம்புக்குள்ளேயே போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளோம். எனவே, அதனை ஏற்றுக்கொள்ள வேண்டிய தேவை தமக்கு உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to இராணுவ பிரசன்னத்துக்கு இடமில்லை: வடக்கு மாகாண சபையின் கன்னி அமர்வில் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்