Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இஸ்ரேலினால் விடுதலை செய்யப் பட்ட 21 பாலஸ்தீன் கைதிகள் புதன்கிழமை அதிகாலை வெஸ்ட் பேங்கினை வந்தடைந்துள்ளனர். மேலும் 5 கைதிகள் காஸா ஸ்டிரிப்பினைத் தாண்டிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

பாலஸ்தீனின் தேசிய அதிகாரத்துவ அமைப்பு எனக் கருதப்படும் PNA உடன் ஏற்பட்ட உடன்படிக்கையை அடுத்து இந்த விடுவிப்பு நடவடிக்கை நிகழ்த்தப் பட்டுள்ளது.

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன் இரு தரப்புக்கும் இடையே 1993 இல் ஏற்பட்ட ஒஸ்லோ சமாதான ஒப்பந்தத்தை அடுத்து நீண்ட காலமாக சிறையில் இருக்கும் தனது 104 கைதிகளை விடுவிக்குமாறு பாலஸ்தீன் கோரிக்கை விடுத்திருந்தது. அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் ஏற்பட்ட இந்த ஒப்பந்தத்தின் படி ஜுலையில் சமாதான ஒப்பந்தத்தை மீள் பரிசீலனை செய்வதாகப் பாலஸ்தீனியர்கள் சம்மதித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து குறித்த 104 கைதிகளில் முதல் குழு ஆகஸ்ட்டில் விடுவிக்கப் பட்டிருந்தது. எஞ்சியுள்ள இரு குழுக்களும் ஜனவரியிலும் மார்ச்சிலும் அடுத்தடுத்து விடுவிக்கப் படவுள்ளதாகவும் அறிவிக்கப் பட்டுள்ளது.

இந்நிலையில் விடுவிக்கப் பட்ட கைதிகள் யாவரும் பாலஸ்தீன் அதிபர் தலைமையகத்தை நோக்கிச் சென்றிருப்பதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

0 Responses to இஸ்ரேலால் விடுதலை செய்யப் பட்ட 26 கைதிகளும் பாலஸ்தீனத்தை வந்தடைந்தனர்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com