Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சவுதி அரேபியாவில் அமைந்துள்ள முஸ்லிம்களின் முக்கிய புனிதத் தலமான மெக்காவுக்கு ஒவ்வொரு வருடமும் உலகம் முழுதும் இருந்தும் மில்லியன் கணக்கான மக்கள் ஹஜ்ஜுப் பெருநாளைக் கொண்டாட செல்வது வழக்கம்.
இதே போன்றே இவ்வருடமும் (2013) வெகு கோலாகலமாக சவுதியில் ஹஜ்ஜுப் பெருநாள் வழிபாடுகள் நேற்று ஆரம்பிக்கப் பட்டன.

முதற் கட்டமாக சவுதி அரேபியாவில் அமைந்துள்ள மவுன்ட் அரஃபாத் (Mount Arafat) இல் உலகம் முழுதும் இருந்து வருகை செய்திருந்த மில்லியன் கணக்கான முஸ்லிம்கள் வழிபாட்டை ஆரம்பித்தனர். இந்நிலையில் இஸ்லாம் மார்க்கம் போதிக்கும் முக்கிய கடமைகளில் ஒன்றான இந்த ஹஜ்ஜு யாத்திரையில் இவ்வருடம் 2 மில்லியன் முஸ்லிம்கள் பங்கேற்றுக் கொண்டதாகவும் இதுவே உலகில் மிகப் பெரிய மத ஒன்று கூடல் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முஸ்லிம்களின் இறைத் தூதரான முஹம்மது நபி பிறந்த இடமாகக் கருதப்படும் மெக்காவில் இருந்து ஞாயிறு தமது பயணத்தைத் தொடர்ந்த யாத்திரீகர்கள் அதன் பின் இறைவன் அல்லாவிடம் இருந்து முஹம்மது நபி பெற்றதாகக் கூறப்படும் இறுதி உபதேசம் செய்யப் பட்ட இடமான மவுன்ட் அரஃபாத் இற்குச் சென்று வழிபாடு நடத்தினர்.

செவ்வாய்க் கிழமை இன்னொரு புனிதத் தலமான மைனா நகரில் அமைந்துள்ள தூண் ஒன்றுக்குக் கல் எறியும் சடங்கு நடைபெறவுள்ளது. ஹஜ்ஜுப் பெருநாளே இஸ்லாம் மதத்தில் கூறப்பட்டுள்ள மிகப் புராதனமானதும், புனிதமானதும் ஆன பண்டிகையாகும். மேலும் பணவசதி உடைய ஊனமற்ற அனைத்து முஸ்லிம்களுக்கும் இந்த யாத்திரை இஸ்லாம் மதத்தால் கட்டாயமாக்கப் பட்டுள்ளது.

இதேவேளை இம்முறை ஹஜ்ஜு யாத்திரையில் மேர்ஸ் (MERS) வைரஸ் தொற்றினால் யாத்திரீகர்கள் பாதிக்கப் படாமல் இருப்பது குறித்து சவுதி அரசு மிகுந்த கவனம் எடுத்து வருகின்றது. ஏனெனில் கடந்த வருடம் மட்டும் இவ்வைரஸ் தொற்றினால் 50 பொது மக்கள் கொல்லப் பட்டமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to இவ்வருடத்தின் ஹஜ்ஜுத் தொழுகை சவுதி அரேபியாவில் ஆரம்பம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com