Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இவ்வருடம் பெப்ரவரி 15 ஆம் திகதி ரஷ்யாவைத் தாக்கிய விண்கல் குறித்தும் அதனால் பலர் காயமடைந்ததும் யாரும் எளிதில் மறந்திருக்க மாட்டார்கள்.
இந்த விண்கல் விழுந்த மிகச் சரியான இடம் மத்திய ரஷ்யாவின் செலையாபின்ஸ்க் புறநகர்ப் பகுதியில் உள்ள செபார்க்குல் ஏரி என கண்டறியப் பட்ட போதும் இதன் முக்கிய பாகங்கள் கிடைக்கப் பெறவில்லை.

இந்நிலையில் உறை நிலையிலுள்ள செபார்க்குல் ஏரியில் 6 மீட்டர் அகலமுள்ள துளையை ஏற்படுத்தி உள்ளே அமிழ்ந்திருந்த விண்கல்லின் அரை டன் எடையுடைய மிகப்பெரிய பாகம் சமீபத்தில் அகழ்ந்தெடுக்கப் பட்டுள்ளது. மேலும் இப்பாகம் இதுவரை பூமியில் கண்டெடுக்கப் பட்ட முதல் 1௦ மிகப்பெரிய விண்கல் பாகங்களில் ஒன்றாகவும் இடம் பிடித்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

17 மீட்டர் விட்டமும் 10 000 டன் எடையும் உடையது எனக் கணிக்கப் பட்ட இந்த விண்கல் நிலத்தில் விழ முன்னமே அதற்குச் சற்று மேல் அந்தரத்தில் வெடித்ததால் ஏற்பட்ட அதிர்வலைகள் (shock waves) காரணமாக கட்டங்கள் வீடுகள் யன்னல்கள் சிதறடைந்து சுமார் 1000 பேர் வரை காயமடைந்திருந்தனர். மேலும் இது பூமியைத் தாக்க வரும் காட்சி பதியப் பட்ட வெப்காம் வீடியோவும் இணையத்தில் வெளியாகிப் பிரபலமடைந்தது.

பெப்ரவரி 15 எரிகல் தாக்குதல் சம்பவத்துக்குப் பின்னர் செபார்க்குல் ஏரியில் இருந்து இதுவரை 12 இற்கும் அதிகமான விண்கல் துண்டுகள் கண்டெடுக்கப் பட்டுள்ளன.

0 Responses to ரஷ்யாவைத் தாக்கிய விண்கல்லின் மிகப் பெரும் பகுதி ஏரியில் இருந்து மீட்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com