Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு இந்திய மத்திய அரசாங்கம் அழைப்பு விடுத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. வடக்கில் தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலை மற்றும் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு தொடர்பான அடுத்தக்கட்ட நகர்வுகள் போன்ற விடயங்கள் தொடர்பில் பேசுவதற்காக இந்த அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

அத்துடன் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் இந்தியா முன்வைக்கக்கூடிய விடயங்கள் தொடர்பிலும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாட்டை அறிந்துக் கொள்வதும் இந்த அழைப்பின் நோக்கமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. எனினும் இந்த அழைப்பின் பேரில் இந்தியா செல்வது குறித்து சீ.வி.விக்னேஸ்வரன் தரப்பில் இன்னும் தீர்மானிக்கவில்லைஎன்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 Responses to முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு இந்திய மத்திய அரசாங்கம் அழைப்பு?

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com