இறுதி மோதல்களின் போது நிகழ்த்தப்பட்டதாகக் கூறப்படும்
குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுக்கவும், மனித உரிமை
விடயங்களின் காத்திரமான செயற்திறனைக் காட்டவும் தேவையான அழுத்தங்களை இலங்கை
மீது பிரித்தானியா வழங்கும் என்று இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர்
ஜோன் ரங்கின் தெரிவித்துள்ளார்.
மனித உரிமைகள் தொடர்பில் அக்கறையான மற்றும் நல்லாட்சிக்கான உறுதிப்பாடு என்பவற்றை பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் இலங்கை அரசாங்கத்தின் மீது கடும்தொனியில் வெளியிடுவார். இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாடுகளில் பிரித்தானிய கலந்து கொள்வது என்பது என்றைக்கும் இலங்கையின் மீதான குற்றச்சாட்டுக்களை விலக்குவதாகவே, இலங்கை அரசாங்கத்தை அங்கீகரிப்பதாகவோ அமையாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
சனல் 4 தொலைக்காட்சி இலங்கை மீது முன் வைத்த மோதல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும், பிரித்தானிய பிரஜை குரம் ஷேய்க் இலங்கையில் கொலை செய்யப்பட்டமை தொடர்பிலான விசாரணைகளை துரிதப்படுத்த வேண்டும் என்கிற அழுத்தங்களையும் பிரித்தானிய வழங்கும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 Responses to இலங்கைக்கான அழுத்தங்களைப் பொதுநலவாய மாநாட்டில் பிரித்தானியா வழங்கும்