பொதுநலவாய நாடுகளின் பின்னர் இலங்கை குறித்து சர்வதேச நாடுகள் முக்கிய
அவதானம் செலுத்தும் என்று பிரித்தானியா தெரிவித்துள்ளது. பிரித்தானியாவின்
இலங்கை உயர்ஸ்தானிகர் ஜோன் ரென்கின் இதனைத் தெரிவித்துள்ளார். அவர்
விடுத்துள்ள அறிக்கை ஒன்றில், பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்துக்
கொள்ளவரும் பிரித்தானிய பிரதிநிதிகள் இலங்கையின் மனித உரிமை சார்ந்த
முன்னேற்றங்கள் தொடர்பில் கேள்வி எழுப்புவார்கள் என்றும்
சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் இந்த மாநாட்டின் போதும், அதன் பின்னரும் இலங்கை சர்வதேச நாடுகளின் உன்னிப்பான அவதானத்துக்கு உட்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை அரசாங்கம் சர்வதேச நாடுகளுக்கு வழங்கி இருந்த வாக்குறிதிகளின் அடிப்படையில், கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க அறிக்கையின் பரிந்துரைகளை முழுமையாக அமுலாக்குவதுடன், மனிதாபிமான மற்றும் மனித உரிமைகள் விடயங்களுக்கு முழுமையான சுதந்திரத்தை வழங்க முன்வர வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

0 Responses to இலங்கை குறித்து சர்வதேச நாடுகள் முக்கிய அவதானம் - பிரித்தானியா