அமெரிக்க உளவுப் பிரிவான சிஐஏ இனால் ஒசாமா பின் லேடனின் இடத்தைக் கண்டு
பிடிப்பதற்கு உதவிய பாகிஸ்தான் டாக்டர் சகில் அஃப்ரிடி ஒரு ஹீரோ அல்ல
என்றும் அவரின் விதி பாகிஸ்தான் நீதிமன்றங்களால் தீர்மானிக்கப் படும்
என்றும் பாகிஸ்தான் சமீபத்தில் அமெரிக்காவுக்குத் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஜலீல் அப்பாஸ் ஜிலானி ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் பாகிஸ்தானின் சட்டங்களை மீறும் விதத்தில் குற்ற நடவடிக்கைகளில் அஃப்ரிடி ஈடுபட்டுள்ளார் எனவும் தன் மீதான விசாரணையை அஃப்ரிடி நீதிமன்றத்தில் எதிர் கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் நவாஸ் ஷெரீஃபின் அமெரிக்க விஜயம் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்குப் பதில் அளிக்கும் போது கூறியுள்ளார். இதைவிட பாகிஸ்தானில் இயங்கி வரும் லஷ்கர் ஏ தைபா அமைப்பையும் பாகிஸ்தான் தடை செய்துள்ளது என்றும் உறுதியான ஆதாரம் கிடைக்கும் போது இந்த அமைப்பின் ஸ்தாபகர் ஹஃபீஸ் மொஹம்மட் சயீட் மீது எந்த ஒரு நடவடிக்கையையும் அமெரிக்கா எடுக்க முடியும் என அந்நாட்டிற்கு பாகிஸ்தான் அரசு அனுமதி வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை அமெரிக்க வெளிவிவகார அமைச்சினால் டாக்டர் அஃப்ரிடியை விடுவிக்குமாறு விடுக்கப் பட்ட வேண்டுகோளை பாகிஸ்தான் நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 2011 மே 2 ஆம் திகதி அமெரிக்க அதிரடிப் படையினர் திடீரென மேற்கொண்ட ரெயிடில் அல்கொய்தா இயக்கத் தலைவர் ஒசாமா பின் லேடன் கொல்லப் பட்டார். இச் சம்பவம் நிகழ்ந்து குறுகிய காலத்துக்குள் லஷ்கர் ஏ இஸ்லாம் போராளிக் குழுவுடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டின் கீழ் ஒசாமா பின் லேடனைக் காட்டிக் கொடுத்த டாக்டர் பாகிஸ்தான் அரசால் கைது செய்யப் பட்டிருந்தார்.

0 Responses to ஒசாமா பின்லேடனைக் காட்டிக் கொடுத்த டாக்டர் ஹீரோ அல்ல!: பாகிஸ்தான்